1 ந்தேதி முதல் திருநெல்வேலி – திருச்செந்தூர் ரயில் வழித்தடம் மின்மயமாக்கப்பட்ட காரணத்தினால் ரயில் நின்று செல்லும் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது. திருநெல்வேலிவுக்கு திருச்செந்தூரில் இருந்து காலை 7.20, 8.25, 2.30, 6.15ஆகிய மணிக்கும், பாலக்காடு எக்ஸ்பிரஸ் 12.20 க்கும் செந்தூர் எகஸ்பிரஸ் 8.10 க்கும் கிளம்புகிறது.
திருநெல்வேலியில் காலை 7.25, 10.40, 11.50, 16.15,18.30 ஆகிய நேரத்தில் திருச்செந்தூருக்கும், செந்தூர் எகஸ்பிரஸ் காலை 5 மணிக்கும், பாலக்காடு எகஸ்பிரஸ் மாலை 13.30க்கும் கிளம்புகிறது.
தற்போது செந்தூர் எக்ஸ் பிரஸ் சுமார் 1 மணிநேரம் பயணம் குறைகிறது. அதாவது பாலக்காடு எக்ஸ்பிரஸ் 30 நிமிடமும், மற்ற ரயில்கள் 15 நிமிடமும் பயண நேரம் குறைகிறது. மேலும் கூடுதலாக ஈரோடு போன்ற இடங்களில் இருந்து திருச்செந்தூருக்கு ரயில் வருவதற்கான வாய்ப்பும் உள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்னர்.
ஆனால் பயணிகளுக்கு தட்கல் டிக்கெட் எடுப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தாதன்குளத்துக்கு திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரயில் காலை 11.03க்கு வருகிறது. இந்த நேரத்தில் தான் தாதன்குளத்தில் உள்ள சுற்றுபகுதியில் உள்ள மக்கள் இங்கு தக்கல் டிக்கெட் எடுக்க காத்து கிடப்பார்கள். 11 மணியை கடந்தால் தக்கல் டிக்கெட் எடுக்க இயலாது. அவர்களுக்கு நாளை முதல் தக்கல் டிக்கெட் கொடுப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கருங்குளத்தினை சேர்ந்த முருகன் கூறும் போது, தாதன்குளம் ரயில் நிலையம் தக்கல் டிக்கெட் மூலமாக அதிக வருவாய் ஈட்டும் ஒரு ரயில் நிலையமாகும். இந்த ரயில் நிலையத்தில் பாலக்காடு எகஸ்பிரஸ் கொரனா காலத்துக்கு முன்பு வரை நின்று சென்றது. தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. தக்கல் டிக்கெட் எடுப்பதிலும் இப்போது சிரமம் ஏற்பட்டுள்ளது. இங்கு இருக்கும் நிலைய அதிகாரி காலை 11 மணிக்கு வண்டியை அனுப்புவாரா அல்லது டிக்கெட் கொடுப்பாரா? என்ற நிலை ஏற்பட்டுள்ளது. காலை 11 மணிக்கு தக்கல் டிக்கெட் எடுக்கும் நேரத்தில் சிறிது தாமதம் ஏற்பட்டால் கூட டிக்கெட் கிடைக்காமல் போய் விடும். எனவே தாதன் குளத்தில் இனி தக்கல் டிக்கெட் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே இந்த வேளையில் தாதன்குளத்தில் கூடுதல் பணியாளரை நியமித்து தக்கல் டிக்கெட்டை தங்கு தடையின்றி எடுக்க வழி வகைசெய்ய வேண்டும் என்று கூறினார்.
தாதன்குளத்தில் தக்கல் டிககெட் எடுப்பதற்கு கூடுதல் அலுவலர் பணி அமர்த்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


