3. வல்லநாடு வெள்ளையத்தேவன்
– கலெக்டர் ஜாக்ஸன்துரை கடுங்கோபத்தில் இருந்தான். தன் படைபலம், ஆயுதபலம், அதிகார பலம் எல்லாம் தெரிந்தும்கூட வீரபாண்டியகட்டபொம்மன் “”வரி கொடுக்க முடியாது” என்று சொல்லிவிட்டு வெளியேறுவதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எதிரியின் கோட்டைக்கே வந்து கர்ஜித்துவிட்டுப் போகும் சிங்கத்தைச் சுட்டு வீழ்த்த ஆணையிட்டான்.
ஆனால், எதிர்த்தவர்களின் தலைகள் வெட்டுப்பட்டன.
துப்பாக்கி தூக்கி வந்த வீரர்கள் பலர் கட்டபொம்மனின் வாளுக்கு இரையானார்கள். தடைகளைத்தாண்டி கோட்டைக்கு வெளியே வந்தான் கட்டபொம்மன். லெப்டினட் கிளார்க் என்ற வெள்ளைக்காரன் கட்டபொம்மனின் மார்புக்கு நேராக துப்பாக்கியைப் பிடித்தபடி தடுத்தான்.
ஒரு நொடி தாமதித்திருந்தாலும் கட்டபொம்மனின் மார்பில் க்ளாக்கின் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்திருக்கும். அந்த நொடியைக்கூட தாமதிக்க விடாமல், கட்டபொம்மனின் போர்படைத் தளபதி மாவீரன் வெள்ளையத்தேவன் க்ளார்க்கின் தலையை வெட்டினான். க்ளார்க்கின் தலையை கட்டபொம்மனின் காலுக்குக் கீழே விழச் செய்தான். சுற்றி நின்ற படைவீரர்கள் நடுங்கிப்போய்விட்டார்கள். வெள்ளையத்தேவனின் துணிச்சலைக் கண்டு “”என் உயிர் காத்த வெள்ளையத் தேவா?” என்ற கட்டபொம்மன் அவனை ஆரத் தழுவிக் கொண்டான். வீரன் வெள்ளையத் தேவன் மட்டும் அன்று அந்த துணிச்சலான முடிவை எடுக்காமல் இருந்திருந்தால், கட்டபொம்மன் உயிர் அன்றே போயிருக்கும். கட்டபொம்மனின் வரலாறு வேறுவிதமாக எழுதப்பட்டிருக்கும்.
சேது நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க இராமலிங்க விலாசம்கோட்டை வாயிலில்தான் இந்த வீரப்போர் நிகழ்ந்தது. இந்த சண்டையைத்தான் வீரத்தளபதி வெள்ளையத் தேவனின் வீரகாவியம் பேசும் சண்டையாகப் போற்றினார். நாட்டார் வரலாற்று அறிஞர்கள். “தலவாசல் சண்டை’ என்று கும்மிபாடினார்கள் நாட்டுப்புறமக்கள்
அந்த நன்றியை கட்டபொம்மன் மறக்கவில்லை. பாஞ்சாலங்குறிச்சியையே விழாக்கோலம் ஆக்கினான்.
வெள்ளையத்தேவனுக்காக மாபெரும் விழா ஒன்றை நடத்திக்காட்டினான். தனக்கு உயிர்ப்பிச்சை அளித்த வெள்ளையத்தேவனுக்கு “மை ஃபாதர்’ என்ற பட்டத்தைக் கொடுத்தான். “என் தந்தை வெள்ளையத்தேவன்’ என்று அழைத்தான். ஃபாதர் என்ற பட்டம்தான் பிற்காலத்தில் “பாதர் வெள்ளை’ என்று அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், “பகதூர்’ என்ற பட்டம்தான் கொடுக்கப்பட்டது என்று சொல்வோரும் உண்டு.
யார் இந்த வெள்ளையத்தேவன்?
சேதுபதி சமஸ்தானத்திற்கு உட்பட்டது சாயல்குடி என்ற கிராமம். இதன் தலைவர் மங்களத்தேவர். சிற்றரசர்களுக்குரிய அத்தனை சிறப்பகளையும் வீரத்தையும் கொண்டவர். இவருடைய மகன்தான் வெள்ளையத்தேவன் என்கிறார்கள்.
எட்டயபுரம் மன்னர் தனக்கு அளித்து வந்த இன்னல்களைக் எடுத்துக் கூறி, கட்டபொம்மன் மங்களத்தேவரிடம் உதவி கேட்டு வந்தான். “உதவி கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்னாமல் உதவுவது நம் பண்பாடு’ என்ற நெறியில், அவருக்கு உதவ தன் மகன் வெள்ளையத்தேவனை அனுப்பியதாக ஒரு செய்தி கூறுகிறது. தந்தையின் ஆணைப்படி தனயன் வெள்ளையத் தேவன் கட்டபொம்மனுக்கு உதவ வந்ததாகவும், வந்த இடத்தில் வெள்ளையத்தேவனின் வீரம் கண்டு, அவனையே தன் படையில் தலைமைத் தளபதியாக நியமித்துக்கொண்டதாகவும் சிலர் கூறுகிறார்கள்.
இன்னொரு கட்டுக் கதையும் உண்டு. சிறுவயதில் கட்டபொம்மன் தன் தந்தையுடன் வல்லநாடு காட்டுக்குள் வேட்டையாடப் போனதாகவும் அங்கு கண்டெடுக்கப்பட்ட குழந்தையை அரண்மனையில் வைத்து வளர்த்ததாகவும், அக்குழந்தைதான் பிற்காலத்தில் வெள்ளையத்தேவனாக வளர்ந்து, படைத் தளபதி அளவிற்கு உயர்ந்ததாகவும் ஒரு கதை வழக்கில் உண்டு. அந்த செஞ்சோற்றுக் கடனுக்காகத்தான் இறுதிவரை கட்டபொம்மனோடு இருந்து வெள்ளையர்களை எதிர்த்துப் போரிட்டு பல வெற்றிகளைப் பெற்றுத் தந்ததாகவும் செவி வழிச்செய்திகள் கூறுகின்றன.
வெள்ளையத்தேவன் பிறப்பிலேயே வீரம் கொண்டவன். இளம் வயது முதல் வேல் சண்டையில் அதிக ஈடுபாடு கொண்டவன். அவன் போருக்குப் போகும் முன்சேவல்போர் நடத்துவானாம். அதில் அவன் சேவல் வெற்றி பெற்றால் போரில் வெள்ளையத்தேவனை யாராலும் வெல்ல முடியாது. எந்த போரிலும் தோற்காத அவனது சேவல் அன்று நடந்த சண்டையில் தோற்றதால்தான் வெள்ளையருக்கு எதிராக நடந்த போருக்குப் போகாவிடாமல் அவன் மனைவி வெள்ளையம்மாள் தடுத்திருக்கிறாள். “”போகாதே போகாதே என் கணவா…. பொல்லாத சொப்பனம் தானும் கண்டேன்” என்ற ஒப்பாரிப்பாடல் இடம் பெற்றுள்ள நாட்டார் பாடலில் இச்செய்தியுள்ளது. “பகதூர் வெள்ளை’ என்ற பெயரில் உள்ள நாட்டுப்பாடலிலும் இந்த ஒப்பாரிப்பாடல் உள்ளது.
தேசிங்கு ராஜனின் பஞ்சக் கல்யாணி குதிரை போன்றதுதான் வெள்ளையத்தேவனின் குதிரையும்.
“ஒட்டப்பிடாரம் வழிதனிலே, ஓடி வருதாம் பேயக்குதிரை…” என்று அந்தக் குதிரையின் வீரத்தைப் பேசாதவர்களே இல்லையாம்.
1799செப்டம்பர் 1-ஆம் தேதி. திருச்செந்தூரில் நடந்த ஆவணி மாதத் திருவிழாவிற்கு கட்டபொம்மனும் ஊமைத்துரையும் சென்ற சமயம். ஒற்றர்கள் மூலம் இதை அறிந்த கர்னல் பானர்மேன், பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிட்டனர்.
பரங்கியர் படையோ பெரும்படை பீரங்கிகள், துப்பாக்கிப் படைகள், குதிரைப் படைகள் என்று ஆயிரக்கணக்கில் கொண்டு வந்து குவித்திருந்தான் ஆங்கிலேயன். பாஞ்சாலங்குறிச்சியில் இருந்ததோ மரபு ரீதியான ஆயுதம் தாங்கிய ஆயிரம் வீரர்கள்.என்றாலும் அஞ்சவில்லை தமிழ்ச்சிங்கங்கள். காரணம் அதற்குத் தலைமை தாங்கியது தலைமைத் தளபதி வெள்ளையத் தேவன். எதிரிகள் படையை அவன் தாக்கியதைக் கண்டு பரங்கியர் பயந்துபின்வாங்கினார்கள். பீரங்கிக்குண்டுகளிடமிருந்து கோட்டையைக் காக்க வெள்ளையத்தேவன் பட்ட பாட்டை எழுத்தில் எழுதமுடியாதாம். நூற்றுக்கணக்கான துப்பாக்கி வீரர்கள் அவன் மார்பை குறிவைத்தார்கள்.
ஆனால், எதிரிகளின் குண்டுகள் அவன் மார்பில் பாய்ந்தபோதும் விடாமல் தொடர்ந்து எதிரிகளை அவன் வாளுக்கு இரையாக்கிக்கொண்டே வந்தான்.
செய்தி கேள்விப்பட்டு கட்டபொம்மனும் ஊமைத்துரையும் திருச்செந்தூரில் இருந்து பாஞ்சாலங்குறிச்சி வந்ததை அறிந்தான். அதுவரை மார்பிலே குண்டுகளைத் தாங்கி, குத்தப்பட்ட வேலையும் பொருட்படுத்தாது பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைப் பத்திரமாக ஒப்படைத்தான். அடுத்தநொடி அந்தப் போர்க்களத்திலேயே வீரமரணம் எய்தினான் வெள்ளையத்தேவன்.
துப்பாக்கிக் குண்டுகளை முத்தமிட்டபோதும் இறுதிவரை மானத்தை இழக்காமல் மரணம் தொட்ட மாவீரன் வெள்ளையத்தேவன் பற்றிய வரலாறு அதிகம் எழுதாமல் போனது ஏனோ?
வீரன் வெள்ளையத்தேவன் நெஞ்சுரமும், போர்த்திறனும்,நல்ல உடல் கட்டும், பேரழுகும், கொண்ட வெள்ளை யத்தேவனை வீரபாண்டிய கட்டபொம்மன் தன் தளபதியாக மட்டுமல்லாமல், மகனா கவும் நினைத்துப் போற்றினார் கட்டபொம்மன் வீரவரலாற்றில் வெள்ளையத் தேவனுக்குக் குறிப்பிடத்தகுந்த இடம் உண்டு. தமது தளபதியான வெள்ளையத்தேவனுக்கு கட்டபொம்மன் பகதூர் எனும் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்துள்ளார்.
வீரபாண்டிய கட்டபொம்மு மகாராஜா. -வுக்குப் பிள்ளைகள் இல்லாததால் வெள் -ளையத் தேவனை தத்து எடுத்து வளர்த்து வந்தார். வெள்ளையத் தேவன் நிகரற்ற வீரன்.ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கு. -வதில் மகாசூரன்.
போர்களம் என்றால் அவருக்குக் கொள் ளை பிரியம். வீரபாண்டிய கட்டபொம்மு மகாராஜாவின் வலது கரம். வெள்ளையர் கள் வீரப்பாண்டியரிடம் கப்பம் கேட்டு வந்த போது முதலில் சீறிப் பாய்ந்தது வெள்ளை யத்தேவன் தான்.
அடங்காத காளை ஒன்றை வெள்ளையம்மாள் என்ற பெண் வைத்திரு. ந்தாள். காளையை அடக்குபவர்களுக்கு. த்தான் நான் மாலையிடுவேன் என்று வீரசபதம் செய்திருந்தாள். ஆனால் காளை மயை யாரும் அடக்க முடியவில்லை. அதை அறிந்த வெள்ளையைத் தேவன் அக்காளையை அடக்கி சாயல்குடியைச் சேர்ந்த இராமையா தேவரின் மகள் வெள்ளையம் மாளை மணந்து கொண்டார்.
இவர்களுக்கு திருமணம் செய்வித்து மகிழ்ந்தனர் வீரபாண்டிய கட்ட பொம்முவும், அவரது தம்பி ஊமைத்துரை யும். இந்நிலையில் 4.9.1799 இல் மேஜர் பானர்மேன் தலைமையில் அவனது
உபதளபதிகள் லெப்டினன்ட் காலின்ஸ், டக்ளஸ், டல்லாஸ், புரூஸ் போன்றோருடன் கிளம்பிய கும்பினிப் படையினர் பாஞ்சால -ங்குறிச்சிக் கோட்டையை முற்றுகை யிட்டனர்.
பானர்மென் பாஞ்சாலங்குறிச்சிக் | கோட்டையைப் பார்த்து, இந்த மண்கோட்டை யை வைத்துக்கொண்டுதானா கட்டபொம் ‘மன் மனக்கோட்டை கட்டுகிறான்? என்று எக்காளமிட்டுச் சிரித்தான். சமரசப் பேச்சு -க்கு இடமில்லை போர்தான் முடிவு என்று கட்டபொம்மன் முழக்கமிட்டதால் போர் தொடங்கியது.
போருக்குப் புறப்படும்போது வெள் -ளையத்தேவனும் வெள்ளையம்மாளும் புதுமணத் தம்பதிகள். அப்போது தான் வெள்ளையம்மாள் கருவுற்றிருந்தாள். போருக்கு முதல்நாள் தீய கனவுகளைக் கண்டாள். இதனால் மறுநாள் போருக்குப் புறப்பட்ட கணவனை போக வேண்டாம்
எனத் தடுத்துப் பார்த்தாள். கெட்ட கனவுகள் வந்தது.எனவே, என்னை விட்டுப் போகாதீர் -கள் என எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தாள். வெள்ளையத் தேவன் பிடிவாதமாக மறுத். -துவிட்டு பகைவருக்கும் ஒரு உயிர்தானே அவனிடம் வாய்தாவா கேட்க முடியும்? | மறவர்குல மங்கை போருக்கு கணவன் புறப்படும் போது அழலாமா? சிரித்துக் கொண்டுவழியனுப்பு வெள்ளையம்மா என ஆறுதல் சொல்லி விட்டுப் போருக்குப் புலி எனப் புறப்பட்டான்.
கோட்டையின் தெற்கு வாயில் வழியாகக் கோட்டைக்குள் நுழைந்த |லெப்டினன்ட் காலின்ஸை வெள்ளையத் தேவன் தனது ஈட்டியால் குத்திக் கொன் றான். இதனால் கோபமுற்ற பானர்மேன் வெள்ளைத்தேவனைக் காட்டிக் கொடுக் கும் கும்பினிவீரர்களுக்கு ஐந்தாயிரம்.
ரூபாய் வழங்குவதாக அறிவித்தான். போர் உக்கிரமாக நடந்தது. வெள்ளையத் தேவன் சுழன்று சுழன்றுஆங்கிலேயர்களை வேட்டையாடிக் கொன்றான். கோட்டையை பலமாக காவல் காத்தான்.
இவனது வீர ஆவேசத் தாக்குதலைக் கண்ட தளபதி பானர்மேன் யாரிவன் என்று கேட்க வெள்ளையத் தேவன் என்றனர் ஆங்கிலேயச் சிப்பாய்கள். தந்திரமாக வெள் ளையத் தேவனைக் கொன்று விட்டு கட்டபொ ம்மு ராஜாவை கைது செய்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் போர் முடிவதாக அறிவித்துவிட்டுப் பாசறைக்கு திரும்பினர்.
போர் முடிந்து விட்டது என்று நினைத்து கோட்டையின் மீது நின்று தன் படைகளுக் -குக் கட்டளை இட்டுக் கொண்டிருந்த வெஸ் களைத் தேவனை ஒரு ஆங்கிலேயச் சிப்பாய் போரின் நெறிமுறைகளுக்கு மாறாகச் சுட்டு விட்டான். இதைச் சற்றும் எதிர்பாராத
வெள்ளையத் தேவன் கோட்டையிலிருந்து விழுந்து மடிந்தான்.
வீரபாண்டிய கட்டபொம்முக்கு இந்த தகவல் போயிற்று. அலறி அடித்துக் கொண்டு வந்து இறந்த அவன் உடலை மடியில் வைத்துக் கொண்டு அழுதார், மகனே என்னை விட்டுப் போய்விட்டாயே என் வலக்கரத்தை இழந்திருந்தால் கூட நான் கலங்கி இருக்க மாட்டேனே ஆனால் இப்போது என்னைத் தனியாக விட்டுவிட்டுப் போய்விட்டாயே எனப் புலம்பினார்.
கணவன் இறந்த செய்தி கேட்டு ஓடி வந்து போர்களத்தில் தலைவிரி கோல மாக ஒப்பாரி வைத்தாள் வெள்ளையம்மாள். கணவன் உடலைப் பார்த்துக் கதறி அழுத அவள் போர் முறைக்கு மாறாகத் தன் கணவனைக் கொன்று விட்ட கயவனைத் தேடிப்போனாள். பதுங்கிப், பதுங்கிப்
போன அவள் எதிரிகளின் பாசறைப் பக்கம் போனபோது ஆங்கிலேயச் சிப்பாய்கள் குடிபோதையில் உளறிக் கொண்டிருந்த தையும், அதில் இருந்த ஒருவனே வெள்ளை யத் தேவனைச் சுட்டவன் என்பதையும், அறிந்த வெள்ளையம்மாள் அவனைக் குத்திக் கொன்று விட்டு, வெள்ளைத் தேவ னின் சாவுக்குப் பழி தீர்த்துக் கொண்டாள்.
04.09.1799இல் மேஜர் பானர்மேன் தலைமையில் அவனது உபதளபதிகள் லெப்டினன்ட் காலின்ஸ்,டக்ளஸ்,டல்லாஸ். புரூஸ் போன்றோருடன் கிளம்பிய கும்பினிப் படையினர் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை முற்றுகையிட்டுத்தகர்த்தனர். கோட்டையின் தெற்கு வாயில் வழியாகக்கோட்டைக்குள் நுழைந்த லெப்டினன்ட்காலின்ஸை வெள்ளையத்தேவன் தனது ஈட்டியால் குத்திக் கொன்றான். இதனால் கோபமுற்ற பானர்மேன் வெள்ளையத்தேவனைக் காட்டிக் கொடுக்கும் கும்பினிவீராகளுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்தான்.
இரவோடு இரவாக கோட்டையிலிருந்து வீரபாண்டியக்கட்டபொம்மனும் ஊமைத்துரையும் வெளியேறினர். மறுநாளும் சண்டை தொடர்ந்தது. தலைப்பாகை மற்றும் தாடியுடன் மாறுவேடத்தில் இருந்த வெள்ளையத்தேவன் தமது கத்தியினைக் கொண்டு வெள்ளையர்களை வெட்டிச்சாய்த்தான். எனினும் வெள்ளையத்தேவன் பணத்திற்கு ஆசைப்பட்டு காட்டிக்கொடுக்கப்பட்டான். காட்டிக்கொடுக்கப்பட்ட வெள்ளையத்தேவன் தூக்கிலிடப்பட்டுக்கொல்லப்பட்டான். (சிலர் நெஞ்சில் குத்து ஈட்டியால் குத்திக்கொலை செய்யப்பட்டான் என்றும் காலின்ஸால் சுட்டுக்கொல்லப்பட்டான் என்றும் கூறுவர்.
இந்தியச் சுதந்திரப் போரில் தன் இன்னுயிரை மாய்த்த இவ்வீரனைப் பற்றியச் செய்திகள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி வட்டாரங்களில் காணப்படும் நாட்டுப்புறப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன. இவ்வீரன் சாயல்குடியைச் சேர்ந்த இராமையாதேவரின் மகள் வெள்ளையம்மாளை, முரட்டுக்காளையை அடக்கி மணந்து கொண்டான் என்பர். மக்கள் இவ்வீரனை ஃபாதர் வெள்ளையத் தேவன் என்று அழைப்பர்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு தான் இவருக்கு சொந்த ஊர் என்பது ஊர்ஜிதமாகி உள்ளது. இதனால்தான் அரசு இவ்வூரில் அவருக்கு சிலையும் மணி மண்டபமும் அமைத்து வைத்துள்ளனர். மேலும் வல்லநாட்டில் வெள்ளையத்தேவன் பிறந்து வளர்ந்தாக கூறப்படும் தெரு தற்போதும் உள்ளது. இந்த தெரு முனையில் ஒரு காவல் தெய்வம் உண்டு. இந்த காவல் தெய்வத்தினை வெள்ளையத்தேவன் உறவினர்கள்வணங்கி வருகிறார்கள்.பெரும்பாலுமே இந்த தெருவில் மண்எடுத்து கொண்டு ,கோழி முட்டையை அடைகாகக வைத்தால் குஞ்சுகள் மிக விரியமாக பிறககுமாம்.அந்த அளவுககு வீரம் செறிந்த மண்ணாக வல்லநாடு கருதப்படுகிறது.
முத்தாலங்குறிச்சியில் உள்ள கவிராயர் ஒருவரின் பழகத்தினால் தாமிரபரணி ஆற்றங்கரைக்கு வந்த கட்டபொம்மன் செல்லும் வழியில் ஊரணியில் தவறி விழுந்த சிறுவனை பார்த்தார். அந்த சிறுவனிடம் உனக்கு உதவி எதுவும் புரிய வேண்டுமா? என கேட்டுள்ளார். அப்போது உங்கள் சாட்டையின் ஒரு முனையை மட்டும் எனக்கு தாருங்கள்.நான் அதை பிடித்து மேலே வந்து விடுகிறேன். என கூற அதன் படியே கட்டபொம்மன் சாட்டையை போட சிறுவனான வெள்ளைத்தேவன் துள்ளி குதித்து மேலே வந்துள்ளார். இதனால் அவரை அடிச்சான் பார் வெள்ளை என்று கட்டபொம்மன் கூறியதாகவும். இந்த பெயர்தான் தற்போது அடிச்சார் பாதர் வெள்ளை என்று இப்பகுதியில் வீர தீர செயல்கள் செய்தவர்களை கூறுகிறார்கள்.
இவர் இருந்தாக கூறப்பட்ட ஊரணி தற்போது நெல்லை தூத்துக்குடி நாலு வழிச்சாலை அமைக்கும்போது அழிந்துவிட்டது. முற்காலத்தில் இவ்விடம் இருந்த ஊரணி இவ்விடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்களை கூறினாலும் வெள்ளையத்தேவன், பலே வெள்ளைத்தேவன் தான். பகதூர் பட்டம் வெற்ற வீரன் தான். இன்றும் வல்லநாட்டில் வெள்ளையத்தேவன், வெள்ளையன், வெள்ளத்துரை, பாதர் வெள்ளை என்ற பெயருடன் பலர் இருப்பதை காணலாம்.


