தூத்துக்குடி அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு செல்வ சக்தி மெடிக்கல் எஜுகேஷனல் அண்ட் சேரிடபுள் ட்ரஸ்ட் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆம் தேதி பெய்த கனமழையால் குளங்கள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் வந்தது. வெள்ளத்தால் ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையை சார்ந்த செல்வ சக்தி மெடிக்கல் எஜுகேஷனல் அண்ட் சேரிடபுள் ட்ரஸ்ட் சார்பில் அதன் நிறுவனர் மருத்துவர். செல்வ சீதாராமன் ஏற்பாட்டின்படி பழையகாயல் அருகில் உள்ள புல்வாவழி கிராம மக்களுக்கு ரூ 2 லட்சம் மதிப்பிலான பெட்ஷீட், சேலை, சாரம், துண்டு, அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன
தூத்துக்குடி டி.எஸ்.பி சால்ட் உரிமையாளர் பெரிய சுவாமிநாதன் தலைமையில் ஊர் தலைவர் கணேசன் மற்றும் பாலமுருகன் ஆகியோரிடம் நிவாரண தொகுப்புகளை ஒப்படைத்தனர். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ரஜினிகாந்த் நற்பணி மன்ற பொறுப்பாளர் விஜய் ஆனந்த், மாடசாமி, கணேஷ், ஜெயராம் மற்றும் புல்வாவழி கிராமத்தினர் கலந்து கொண்டனர்.


