சாத்தான்குளம் பகுதியில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை தொழிலாளர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் மாலை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18ஆம் தேதியில் ஏற்பட்ட கனமழை காரணமாக பல பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதை.யடுத்து தமிழக அரசு சார்பில் துரிதமாக செயல்பட்டு மீட்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் சாத்தான்குளம் பகுதியில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட தமிழக தொழிலாளர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவி கணேசன் நேற்று மாலை வருகை தந்து பார்வையிட்டார்.
முன்னதாக பன்னம்பாறை பகுதியில் பார்வையிட்டார். அப்போது அங்கு பள்ளி மாணவர்கள் வசதிக்காக சாத்தான்குளத்திற்கு நகர பேருந்து இயக்க உடனடியாக போக்குவரத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு, சனிக்கிழமை முதல் நகர பேருந்து இயங்கும் படி உத்தரவிட்டார் இதனையடுத்து வேதக்கோவில் தெருவில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது அங்குள்ள மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிவாரண தர வேண்டி அமைச்சரிடம் வலியுறுத்தினர்.
அதன் பேரில் உடனடியாக நிவாரணம் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனை அடுத்து அமைச்சர் கோமானேரி பகுதியில் வந்து பார்வையிட்டார். அப்போது அங்குள்ள மக்கள் அங்குள்ள பாலம் உடைந்ததால் அந்த பகுதியில் சிறு பாலம் கட்ட கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அங்கு பாலம் கட்டுவதற்கு நிதி ஒதுக்க ஏற்பாடு செய்ய கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா ராய் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு தொலைபேசி வாயிலாக அந்த இடத்தில் இருந்து தொடர்பு கொண்டு பேசி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதனை அடுத்து கூவைகிணறு பகுதியில் உடைந்த பாலத்தை பார்வையிட்டார். அப்போது அப்பகுதி மக்கள் அமைச்சரிடம் பாலம் கட்ட நிதி ஒதுக்கியும் பாலம் கட்டும் பணிகளை தொடங்கவில்லை என புகார் தெரிவித்தனர். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதனையடுத்து வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு இந்த பாலப் பணிகளை உடனே தொடங்கும்படி உத்தரவிட்டார்.
அப்போது வட்டாட்சியர்கள் ரதிகலா, கோபால், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ், கருப்பசாமி, ஒன்றிய திமுக செயலர்கள் ஜோசப், பொன் முருகேசன் நகரச் செயலர் மகா.இளங்கோ, மாவட்ட பிரதிநிதி அன்னகணேசன், சரவணன், சாலை பாதுகாப்பு நுகர்வோர் குழு உறுப்பினர் போனிபாஸ், ஒன்றிய கவுன்சிலர் ப்ரெனிலா கார்மேல், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பசுபதி, வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்


