தென்தில்லை என்று அழைக்கப்படும் மிகவும் பழமையான திருக்கோயில் செய்துங்கநல்லூர் சிவன்கோயிலாகும். இந்த கோயிலை சிவகாமி சமேத பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் என்றழைப்பர். இந்த கோயிலில் நடராஜ பெருமானின் திருநடன தரிசனத்தை திருவாதிரை திருநாளில் 10 தினங்களாக தரிசத்து கொண்டாடும் விதமாக திருவிழா கொண்டாடப்படுகிறது. தினமும் காலையும் மாலையும யாகசாலை பூஜைகளும் சுவாமி திருவீதி உலா எழுந்தருளும் வைபவமும் திருநடன தீபா£தனை தரிசமும் நடந்து வருகிறது. கடந்த 28 ந்தேதி கொடியேற்றம் நடந்தது. பெருங்குளம் செங்கோல் மட ஆதினம் 103 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக கத்தியஞான பரமாச்சார்ய சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். முதல் நாள் மண்டப படியை பட்டன் மூப்பனார் செய்திருந்தார். இரண்டாம் நாள் மண்டப படியை ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் குடும்பத்தார் செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் யாகசாலை முடிந்து திருக்கோவில் உள்பிரகார த்தில் வீதி உலா எழுந்தருளல் நடந்தது. மூன்றாம் நாள் யாகசாலை பூஐஜகள் மூலவர் மற்றும் நடராஜர் பஞ்ச மூரத்தி க்கு அபிசேகம் தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு««ல் யாகசாலை பூஜைகள் தீபாரதனை சுவாமி திருக்கோவில் உள்பிரகார வீதி உலா எழுந்தருளல் தீபாராதனை நடந்தது. இதற்கான மண்டகபடியை வீரசைவ யோகீஸவரர் சமுதாயத்தினர் செய்திருந்தனர். வருகிற 1 ந்தேதி 1008 சங்காபிசேகம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைதுறையினரும் , ஆன்மிக பேரவையும் செய்து வருகின்றனர்.


