
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். எழுத்து துறையில் என்னுடைய 75 வது நூல் தற்போது வெளிவர உள்ளது. இதற்கு இடைத் தாமிரபரணி என பெயர் வைத்துள்ளேன். நான் கடந்த 6 வருடங்களாக தாமிரபரணி ஆற்றில் களப்பணியாக சென்று எழுதிய “நதிக்கரையோரத்து அற்புதங்கள் பாகம் 2” என்ற தொடர் வணக்கம் மும்பை வார இதழில் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த தொடரில் கோபாலசமுத்திரம், தருவை, முன்னீர்பள்ளம், பழவூர், கல்லூர், கொண்டாநகரம், சுத்தமல்லி, கருங்காடு, திருவெங்கட நாதபுரம் பற்றி எழுதியுள்ளேன். மேலும் இந்த ஆறு வருடத்தில் தாமிரபரணி ஆற்றில் நடந்த போராட்டங்கள், வழக்குகள், சம்பவங்கள் பற்றியும் எழுதியுள்ளேன். இது தாமிரபரணியின் பழங்கால மற்றும் நிகழ்கால சம்பவங்கள் அடங்கிய தொகுப்பு. சுமார் 1000ம் பக்கத்தில் இந்த நூல் மிகப்பிரமாண்டமாக வெளியாக உள்ளது. ஒவ்வொரு தாமிரபரணி மைந்தர்கள் மட்டுமல்லால் தமிழர்கள் கையில் இந்த நூல் இருப்பது அவசியமாகும். இந்த நூலை எனது “தலைத் தாமிரபரணி”யை வெளியிட்ட காவ்யா பதிப்பகமே வெளியிடுகிறது. இதற்கான வெளியிட்டு விழா வருகிற நவம்பர் 21 தேதி நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் வைத்து நடைபெறுகிறது. இத்துடன் காவ்யா பதிப்பகமும், மனோன்மணியம் -சுந்தனார் பல்கலைகழக தொல்லியல் துறையும் இணைந்து நடத்தும் விழாவில் குலதெய்வ வழிபாடு குறித்த கட்டுரை தொகுப்பும் வெளியாக உள்ளது. முனைவர் சுதாகர் எழுதிய “ஊர் சுற்றும் விஞ்ஞானி நூலை”யும் வெளியிட உள்ளனர். இந்த விழாவிற்காக உழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றி. வெளியிட உதவியாக இருக்கும் துணை வேந்தர் முனைவர் சந்திரசேகர் அய்யா, தொல்லியல் துறை தலைவர் முனைவர் சுதாகர் அய்யா காவ்யா பதிப்பக உரிமையாளர் முனைவர் சண்முகசுந்தரம் அய்யா, முனைவர் ஹரிஹரன், வணக்கம் மும்பை ஆசிரியர் ஜெயஆசிர் அவர்களுக்கும் நன்றி.- அன்புடன் முத்தாலங்குறிச்சி காமராசு