பெரும்பாலும் தலைவர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்வதில்லை. அரசியல் தலைவர்களை திடீரென்று பீடம் அமைத்து அச்சிலையை அதன் மேல் வைத்துக் கட்டி விடுவார்கள். ஆனால் திருவைகுண்டம் அருகே உள்ள பத்மநாபமங்கலத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலையை 41 நாள் பூஜை செய்து விநாயகர் சிலையை எப்படி நெல்லில் வைத்து தண்ணீரில் வைத்து பூவில் வைத்து பிரதிஷ்டை செய்வோமோ அப்படியே தேவர் சிலையை வல்ல நாட்டார் பிரதிஷ்டை செய்துள்ளார்.

நான் எழுதி தினமலரின் தாமரை பிரதர்ஸ் மீடியா வெளியிட்ட “வரங்களை அள்ளித்தரும் வல்லநாடு சித்தர்” நூலின் ஒரு பகுதியில் பசும்பொன் அய்யாவை பற்றி எழுதியுள்ளேன். படித்து கருத்தை தெரிவியுங்கள். நூல் வேண்டுவோர் 8760970002 என்ற எண்ணில் தொடர்ப்பு கொள்ளுங்கள். நூல் உங்கள் கையில் கிடைக்கும் போது பணம் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம் . நன்றி.- அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


