பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்கள் என வாழ்ந்து மறைந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது ஜெயந்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.. தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் 3வது மைல் அருகே அமைந்துள்ள முத்துராமலிங்க தேவரின் திருவுருவச் சிலைக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இந்நிகழ்வில் அதிமுக அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை, மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணைச் செயலாளர் பெருமாள் சாமி, மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், முன்னாள் நகர் மன்ற தலைவர் இரா.ஹென்றி, பகுதி செயலாளர்கள் ஏ.முருகன், சேவியர், நட்டார் முத்து, ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன், மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா வக்கீல் மந்திரமூர்த்தி, மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் நடராஜன், பில்லா விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மேற்கு பகுதி அதிமுக செயலாளர் ஏ. முருகன் செய்திருந்தார்.


