செய்துங்கநல்லூரில் கண்நோய் தீர்க்கும் புனித பிரகாசியம்மாள் ஆலயத்திருவிழா கடந்த 16 ந்தேதி கொடியேற்றத்துடன்நடந்தது. சாத்தான்குளம் மறை வட்டம் முதன்மை குரு ரவிபாலன் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு ஜெபமாலை, கொடிபவனி, கொடியேற்றம் , பிராத்தனை திருப்பலி நடந்தது. அதன் பின் தொடர்ந்து தினமும் 7.30 மணிக்கு திருப்பலி நடந்தது. திருப்பலியை நாட்டார்குளம் பங்கு தந்தை பிளேவியன், பழைய காயல் பங்கு தந்தை வினிஸ்டன், தென் மண்டல இளையோர் பணிகுழு இயக்குனர் ஜேசுராஜ், திசையன் விளை பங்கு தந்தை டக்ளஸ், சாத்தான்குளம் மேரி இம்மா குலேட் பள்ளி முதல்வர் விஜயன் , ஸ்ரீவைகுண்டம் பங்கு தந்தை கிஷோக், ஏர்வாடி பங்கு தந்தை கிராசியுஸ், அமலிநகர் பங்குதந்தை வில்லியம் சந்தானம், மறைமாவட்ட பொருளாளர் சகாயம் ஆகியோர் தலைமை தாங்கி தினமும் திருப்பலி நடத்தினர் . இறுதிநாள் கூட்டுதிருப்பலி நடந்தது. அதை தொடர்ந்து பிரகாசியம்மாள் தேர் பவனி நடந்தது. அதன் பின் கொடியிறக்கப்பட்டது. தொடர்ந்து நற்கருணை ஆசீர் உடன் திருவிழா மிகச்சிறப்பாக முடிந்தது. இதற்கான ஏற்பாடுகளை செய்துங்கநல்லூர் பங்கு தந்தை ஜேக்சன் தலைமையில் ஊர் கமிட்டி தலைவர் சார்லஸ் ராயர், துணைத்தலைவர் பிச்சை ராயர், செயலாளர் சுரேந்திரன், பொருளாளர் திருச்செல்வம் மற்றும் ஊர் நிர்வாக கமிட்டியினர், அருட்சகோதரிகள் மற்றும் இறை மககள் செய்திருந்தனர்.


