கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்பிடி தொழில் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. கடற்கரையோரம் உள்ள கிராமங்களில் உள்ள மக்கள் கடலில் சென்று மீன்பிடித்து வருமானத்தை ஈட்டி வருகிறார்கள். மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க வெளிபொருத்து இயந்திரங்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
தொழிலுக்கு செல்லும்போது எதிர்பாராத விதமாக வெளிப்பொருத்து இயந்திரங்கள் பழுதாகி விடுவதால் மீனவர்கள் கரைக்கு திரும்ப முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். அந்த நேரத்தில் இயந்திரத்தில் ஏற்படும் பழுதுகளை சரி செய்து பாதுகாப்பாக கரை திரும்புவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ராஜாக்கமங்கலம் துறை கிராமத்தில் நடைபெற்றது.
இயந்திரங்களை பழுது பார்க்கும் தொழில் நுட்ப வல்லுநர் ராபின் இயந்திரத்தில் ஏற்படும் சிறிய பழுதுகளை எப்படி சரி செய்வது என்று விளக்கம் அளித்தார். இதில் சுமார் 40 மீனவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


