மாநில அளவிலான பழுதூக்கும் போட்டிகளில் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியை சேர்ந்த மாணவிகள் 2வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
சேலத்தில் மாநில அளவிளான பழுதூக்கும் போட்டி உள்ள ஏவிஎஸ் பொறியியல் கல்லூாயில் கடந்த 24,25,26 தேதிகளில் நடைபெற்றது. இதில், 19 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியருக்கும், 45 வயதுக்குட்பட்ட ஜூனியர் ஆண்கள், 32 வயதுக்குட்பட்ட ஜூனியர் பெண்கள், 25 வயதுக்குட்பட்ட சீனியர் ஆண்கள், 39 வயதுக்குட்பட்ட சீனியர் பெண்கள் என ஆண்கள் – பெண்களுக்கு 10 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.
இப்போட்டியில் சேலம், சென்னை, தூத்துக்குடி, திருவள்ளுர், கோவை மதுரை, திருவாருர் உட்பட பல மாவட்டங்களில் 90 ஆண்களும், 110 பெண்களும் பங்கேற்றனர். இதில் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியை சேர்ந்த 10க்கு மேற்பட்ட மாணவியர் பங்கேற்றனர்.
இதில் அனீ 45 kg (சீனியர்) பிரிவில் 3ஆம் இடத்தையும், 49kg (சீனியர்) பிரிவில் மரிய அசிந்தா 3ஆம் இடத்தையும், 55kg-ல் (ஜூனியர்) பிரிவில் ரசிமா பவானி முதலாம் இடத்தையும், சீனியர் பிரிவில் 2ஆம் இடத்தையும், 59kg-ல் மகாலெட்சுமி (ஜூனியர் மற்றும் சீனியர்) பிரிவில் இரண்டாம் இடத்தையும், 64kg பிரிவில் ஸ்ரீ மாரி தங்கம் (சிறுமியா) 3ம் இடத்தையும் +87kg பிரிவில் அக்ஷயா (ஜூனியர் மற்றும் சீனியர்) பிரிவில் 2ம் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
இவர்கள் மொத்தம் 232 புள்ளகளை பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தை பெற்று மகளிர் ஜூனியர் ரன்னர் கோப்பையை வென்றுள்ளனர். இவர்களை கல்லூரி முதல்வர் ஜெசி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். கல்லூரி உடற்கல்வி ஆசிரியை கிறிஸ்டி பெர்னட்டோ மற்றும் தமிழ்நாடு அமச்சூர் பழுதூக்கும் சங்கத்தின் மாநில பொது செயலாளர் வழக்கறிஞர் அசோக், மாவட்ட செயலாளர் நெல்சன் பொன்ராஜ் மற்றும் கல்லூரி பழுதூக்கும் பயிற்சியாளரும் மாநிலதுணை தலைவர் நவராஜ் புல்கானின் டேனியல் உடன் இருந்தனர்.


