பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் தமிழ்த்துறை மாணவர்கள் சார்பில் வியாழ வட்டம் நிகழ்ச்சி நடந்தது. கௌசானல் அரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு துறைத்தலைவர் இருதயராஜா தலைமை வகித்தார். வியாழ வட்டம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் உதவிப்பேராசிரியர் முனைவர் ஆ. அருள்செல்வி வரவேற்றார். தென்நாட்டு ஜமீன்தார்கள் என்ற தலைப்பில் நான் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு சிறப்பு உரையாற்றினேன் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்று நினைவு பரிசு வழங்கினேன். நான் பேசும் போது நமது முன்னோர்கள் சுகாதரத்துக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தவர்கள் . ஆகையால் தான் இறந்த உடல்களை முதுமக்கள் தாழிக்குள் வைத்து புதைத்துள்ளார்கள். அந்த கலாச்சாரம் இன்று ஆதிச்சநல்லூரில் பெருமையாக கொண்டாடப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் தண்ணீரை அசுத்தப்படாமல் இருக்க உள்ளே விழுந்து இருக்கும் பொருள்களை எடுக்க இரும்பாலான ஈடுக்கியை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். 3 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட ஈடுக்கிகள் தற்போது அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டள்ளன. அதுபோலவே எட்டயாபுரம் ஜமீன்தார்கள் நீர் நிலைகளை பாதுகாக்க பல நடவடிக்களை எடுத்துள்ளார்கள். குளத்தூர் ஜமீன்தார் நெல்லை நகரத்தில் உள்ள இரட்டை கால்வாய்களை அசுத்தப்படுத்த கூடாது என படகு மூலம் காவல்காரர்களை காவல் பணிக்கு நியமனம் செய்துள்ளார்கள். இதபோல் ஜமீன்தார்கள் நல்ல பணிகள் பல செய்துள்ளார்கள். தமிழக மக்களின் பண்பாடுகளை பாதுகாக்கும் வண்ணம் இந்தியாவிலேயே முதல் முதல் சைட் மியூசியம் ஆதிச்சநல்லூரில் அமைந்துள்ளது. அதை கண்டு களிக்க ஒவ்வொரு மாணவ மாணவிகளும் வந்து செல்லவேண்டும். மற்றவர்களுக்கு நமது பாரம்பாரியங்களை மற்றவர்களுக்கு கடத்த வேண்டும் என்று பேசினேன். மாணவர்களோடு பேசிய தருணம் பொன்னான தருணம் முனைவர் த.சே. கலாவதி நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை முதுகலை இரண்டாமாண்டுத் தமிழ் மாணவி சி. பெமினா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்த முனைவர் அந்தோணி அய்யா அவர்களுக்கும், என்னை உற்சாகபடுத்திய முனைவர் ரவி அய்யா, முனைவர் ஜான்பால் அய்யா, முனைவர் இளங்கோமணி அய்யா உள்பட அனைத்து போரசிரியர்களுக்கும் வாய்ப்பை தந்த முதல்வர் , துறைத்தலைவர், ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கும் நன்றி- அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு.


