தூத்துக்குடியில் குடும்பப் பிரச்னையில் விஷம் குடித்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி கோமஸ்புரத்தைச் சேர்ந்த கருப்பசாமி (54), தூத்துக்குடி நகர கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். அவருக்கு குடும்பப் பிரச்னை இருந்ததாம். இதனிடையே, மருத்துவ விடுப்பிலிருந்த அவர், கடந்த 22ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தாராம்.
அவரை மீட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் நேற்று உயிரிழந்தார். தாளமுத்து நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


