வல்லநாட்டில் இருந்து கலியாவூர் செல்லும் சாலையில் இறு புறமும் கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளது. இதனால் அந்த வழியாகச் செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இருபுறமும் ஒதுங்க முடியாத சூழல் உள்ளது. இதனால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்படுகிறது.
எனவே இந்த சாலையின் இருபுறமும் உள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிக்கு கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து இதற்கு உடனே உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பசுமை தமிழ் தலைமுறை அமைப்பையும் பாராட்டினர்.


