செய்துங்கநல்லூர் பைத்துல்மால் கடந்த எட்டு வருட காலமாக ஏழை எளிய மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அதன் அடுத்த கட்ட முயற்சியாக இலவச மருத்துவ சேவை திட்டத்தினை துவங்கியது. இதற்கான நிகழச்சி முஹைதீன் ஆண்டவர் ஜாமியா பள்ளிவாசல் வளாகத்தில் வைத்து நடந்தது. பைத்துல்மால் தலைவர் ஹாலித் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் சுமார் 40 நபர்களுக்கு இலவச மருத்துவ சேவை திட்டம் அடையாள அட்டை வழங்கப்பட்டது. துணை தலைவர் நாகிப், துணை செயலாளர் தாவுத் மற்றும் அயல்நாட்டு கமிட்டி தலைவர் யாசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முஹைதீன் ஜாமிஆ பள்ளிவாசல் தலைவர் அலியார், கேம்லாபாத் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் மோத்தி முஸம்மில் தூத்துக்குடி மாவட்ட கலை இலக்கிய இசை சங்க உறுப்பினர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். பொருளாளர் முகமது தாரிக் வரவேற்றார். செயலாளர் யாசர் அரபாத் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியை பைத்துல்மால் செயற்குழு உறுப்பினர் உபைஸ் தொகுத்து வழங்கினார். இலவச மருத்துவ சேவை திட்டத்தின் அடையாள அட்டையினை சிக்கந்தர், இப்ராஹிம் மற்றும் அப்துல் காதர் பயனாளிகளுக்கு வழங்கினர். மேலும் இந்நிகழ்ச்சியில் பைத்துல்மால் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், ஜமாத்தார்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..


