ஸ்ரீவைகுண்டத்தினை சேர்ந்தவர் சிவாஜி முருகேசன். சிவாஜி ரசிகரான இவர் ஹோட்டலில் சப்ளையர் வேலை செய்து கொண்டே பல்வேறு நற்பணிகளை செய்து வந்தார். மேலும் வருடந்தோறும் சிவாஜி கணேசன் பெயரில் பல்வேறு விருதுகளை மாணவ மாணவிகளுக்கு செய்து வந்தார். தற்போது இவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். வீட்டில் ஓய்வாக இருக்கும் இவரை ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமித்த ராஜ் நலம் விசாரித்தார். அவரிடம் அவரது தந்தையோடு தான் பயணித்த அனுபவங்களை ஒரு புத்தகமான வழங்கினார். எம்.எல்.ஏ வுடன் வட்டார தலைவர் நல்லகண்ணு , கே.டி.சி. சந்திரன், பந்தல் முருகன் உள்பட பலர் வந்தனர்.