தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காந்தி நினைவு நாளை முன்னிட்டு தீண்டாமை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.
மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம் தலைமையில் அனைத்து அரசுத்துறை ஊழியர்கள் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முன்னதாக இந்திய தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர்.


