கயத்தாறு அருகே கோவில்களில் பூட்டை உடைத்து நகை மற்றும் உண்டியல் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே செட்டிகுறிச்சி அருகே தெற்கு கோனார் கோட்டை புதூர் கிராமத்தில் காளியம்மன், மாரியம்மன் ஆகிய இரண்டு கோவிகளில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ள சென்று சாமி சிலைகள் கழுத்தில் கிடந்த 16 பொட்டுத் தாலிகள் மற்றும் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா கருப்பசாமி மற்றும் நாட்டாண்மை சண்முகையா ஆகியோர் கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுதா தேவி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


