உடன்குடி அருகே கண்மாயில் மீன்பிடிக்க சென்றவர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகேயுள்ள பிச்சிவிளை காலனியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சொக்கலிங்கம் (60). இவர் நேற்று காலை உடன்குடியில் உள்ள கண்மாயில் மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக கண்மாயில் தவறி விழுந்த அவர் நீரில் மூழ்கி இறந்தார். சம்பவம் குறித்து குலசேகரன்பட்டினம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


