தூத்துக்குடியில் தை அமாவாசையை முன்னிட்டு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை ஆகிய நாட்களில் இந்துக்கள் தங்கள் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இந்நிலையில் தை அமாவாசை தினத்தை முன்னிட்டு நேற்று தூத்துக்குடியில் உள்ள கடற்கரையில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
தை அமாவாசையை முன்னிட்டு பணியின் போது உயிரிந்த ஊழியர்கள் மற்றும் பயணத்தின் போது உயிரிழந்த ஆன்மாக்களுக்காக தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பகுதியில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தை அமாவாசை சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அரசு முன்பதிவு மைய ஒப்பந்த தாரர் ராஜேந்திரன் மற்றும் எஸ்இடிசி, டிஎன்எஸ்டிசி ஊழியர்கள் செய்திருந்தனர்.


