தூத்துக்குடியில் சாலைப் பணிகளை கனிமொழி எம்பி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி குறிஞ்சி நகர் பகுதியில் புதியதாக தார் சாலை அமைக்கும் பணியை கனிமொழி எம்பி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


