தூத்துக்குடியில், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் கனிமொழி எம்பியிடம் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த அதிகனமழை மற்றும் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்காக இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் வழங்கிய நிவாரணப் பொருட்களை இந்தியன் ஆயில் நிறுவன இயக்குநர் அசோகன், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியிடம் இன்று வழங்கினார். பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் ஆகியோர் உடனிருந்தனர்.


