கனமழை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் டிச.30 முதல் ஜன.1 வரை கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் நாளை (டிச.30) முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


