தூத்துக்குடியில் நிஷா பவுண்டேஷன் குடிபோதை மற்றும் மனநிலை சிகிச்சை மையம் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
விழாவிற்கு அதன் இயக்குனர் எஸ். முகமது ஷாநவாஸ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில துணை கொள்கை பரப்பு செயலாளர் ஷாஜகான் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை செயல் தலைவர் பழரசம் பா. விநாயகமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரத்த தான முகாமை துவக்கி வைத்தார்.
இதில் 35 பேர் இரத்ததானம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாந்தி. கோ வைதீஸ். மாநகராட்சி சுகாதார குழு தலைவர் எஸ் சுரேஷ் குமார், மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்


