நாசரேத் அருகே ஞானராஜ் நகரில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் நாசரேத் அணி வெற்றி பெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி ஊராட்சி ஞானராஜ் நகரில் கிரிக்கெட் போட்டி 4 நாட்கள் நடந்தது. மொத்தம் 16 அணிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில் நாசரேத் ஸ்பீட் வேஸ் அணியும், ஞானராஜ் நகர் நியுஸ் கிளப் அணியும் மோதின. இதில் நாசரேத் ஸ்பீட்வேஸ் அணி வெற்றி பெற்று கோப்பை பரிசை தட்டிச்சென்றது.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு முன்னாள் நாசரேத் பேரூராட்சி தலைவர் ரவி செல்வகுமார் தலைமை வகித்து வெற்றிபெற்ற நாசரேத் ஸ்பீட் வேஸ் அணிக்கு கோப்பை பரிசு மற்றும் ரொக்கப்பணத்தையும், 2 வது இடத்தை பிடித்த ஞானராஜ் நகர் நியுஸ் கிளப் அணிக்கு மாவட்ட திமுக பிரதிநிதி கலை அரசு கோப்பை பரிசு மற்றும் ரொக்கப் பணத்தையும் வழங்கினர். ஏற்பாடுகளை ஞானராஜ்நகர் நியுஸ் கிளப் அணியினர் செய்திருந்தனர்.


