தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள பாட்டக்கரையில் உள்ள பத்திரகாளியம்மன் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் 2வது செவ்வாய் கிழமை அன்று திருவிளக்கு பூஜை நடந்து வருகிறது. அதேபோல் கார்த்திகை மாத திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.
இதில் கலந்து கொண்ட பெண்கள் ஓம் சக்தி, பராசக்தி என்ற கோஷத்துடன் வழிபட்டனர். இதில் மதுரை, நெல்லை, திருச்செந்தூர், குரும்பூர், ஆழ்வார்திருநகரி, ஏரல், தென்திருப்பேரை, நாசரேத், சாத்தான்குளம், ஆறுமுகநேரி, காயல்பட்டிணம், ஆத்தூர், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதில் கோயில் தர்மகத்தா ஜெயராகவன், விஜயராகவன், ஐஓபி முருகன், நாசரேத் முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


