இன்று புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் அவர்கள் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் தூத்துக்குடி பாஜக மாவட்ட செயலாளர் வக்கீல் செந்தில்குமார் என்ற பிரபு தலைமையில் ஒன்றிய தலைவர் நங்கமுத்து ,அமைப்பு சாரா மக்கள் சேவை பிரிவு மாநில செயலாளர் கோமதி ராஜ், பிறமொழி பிரிவு மாவட்ட செயலாளர் தம்பான், விவசாயி மாவட்ட செயலாளர் பேச்சி, பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் ராமலிங்கம், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் முருகன், அரசு போக்குவரத்து துறையைச் சார்ந்த திருநெல்வேலி துணை மேலாளர் சசிகுமார் , தூத்துக்குடி மேலாளர் கண்ணன் துணை மேலாளர் பூல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டார்கள்
சமரச பேச்சுவார்த்தையில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டது தடம் எண் 150 சாதாரண பேருந்து திருநெல்வேலி முதல் தூத்துக்குடி 40 தடவையும் தூத்துக்குடி முதல் திருநெல்வேலி 40 தடவையும் இயக்க ஒப்பு கொண்டார்கள்,SFS வண்டி எண் 579 நாலு பேருந்துகள் 9 தடவை தூத்துக்குடி முதல் திருநெல்வேலி வரை சென்று வருவதாகவும் அதனை கண்காணிக்க ஆய்வாளரை நியமனம் செய்து கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்க ஒப்புக்கொண்டு உள்ளார்கள் பேருந்துகள் தூத்துக்குடியில் இருந்தும் திருநெல்வேலியில் இருந்தும் கிளம்பும் நேர கால அட்டவணையை தருவதாகவும் ஒப்புக்கொண்டு உள்ளார்கள் இந்த கால அட்டவணையை அனைத்து பேருந்து நிறுத்தத்திலும் வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்து தருகிறோம் என்று கூறியுள்ளார்கள்
இவ்வாறு இந்த சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது


