சாத்தான்குளம் அருகே மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்டுள்ள பனை பொருள் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகளுக்கு தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு அமைச்சகம், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின், மத்திய பனை வெல்லம் மற்றும் பனை பொருள் நிறுவனம் , மதர் சமூக சேவை நிறுவனம், லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவனம் சார்பில் பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் மூலம் பனை பொருள் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகளுக்கு தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் சாத்தான்குளம், காந்திநகர் அருகே உள்ள கொம்மடிகோட்டை கிராமத்தில் சமுதாய நல கூடத்தில் வைத்து நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் பனை தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன மாநிலத் தலைவரும், மதர் சமூக சேவை நிறுவன இயக்குனருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி தலைமை தாங்கினார். கொம்மடி கோட்டை கிராம நிர்வாக அலுவலர் பொ.சுபாஷ் முன்னிலை வகித்தனர். லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ்.பானுமதி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினராக மத்திய பனை வெல்லம் மற்றும் பனை பொருள் நிறுவன உதவி இயக்குனர் பிரபாகரன் கலந்து கொண்டு பேசியதாவது
நலிவடைந்து வரும் பனை தொழிலை பாதுகாக்க வேண்டும். பனை தொழிலை தொழிலாளர்களுக்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கி உள்ளது. பனையை பாதுகாக்க மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் ஒரு கோடி பனை மரங்களை வளர்க்க கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து பனை மர விதைகள் விதைக்கப்பட்டு வருகிறது. மேலும் பனை பொருள் உற்பத்தியாளர் குழுக்களை தொடங்கி பனை தொழிலாளர் மேம்பாட்டுக்காக பல்வேறு தொழில் பயிற்சி மற்றும் தொழில் கடன், அரசு மானிய கடன் பெற்றுக்கொடுத்து வந்தனர். மேலும் பனையை பாதுகாக்க செங்கல் சூலை மற்றும் விறகிற்காக பனை மரங்கள் வெட்டப்பட்டு வருவதை தடுக்க பல்வேறு முயற்சி எடுத்துள்ளார்கள். இயக்குனர் கென்னடியின் சேவை பாராட்டுதலுக்கு போற்றுதலுக்குரியது.
பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் கடன் உதவி பெறுவதற்காக விண்ணப்பிக்கும் முறை, தேவைப்படும் ஆவணங்கள், பயனாளிகள் தேர்வு, திட்ட அனுமதி வங்கி கடன் தொகை, சொந்த முதலீடு, மானியம், , சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்கள், தகுதியற்ற தொழில்கள், இரண்டாம் முறை கடன் தொகை பெறுவதற்கான வழிமுறைகள், பற்றி தெளிவாக விரிவான விளக்கங்களை கூறினார்.
இக்கருத்தரங்கில் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க தென்மண்டல ஒருங்கிணைப்பாளரும், தூத்துக்குடி மாவட்ட தலைவருமான ராஜ்கமல், ஊரக புத்தகத் திட்டத்தின் பணியாளர் ரோஸ்லின் ஆகியோர் கருத்துறை வழங்கினர். இதில் மதர் பனை பொருள் உற்பத்தியாளர் கூட்டமைப்பு நிர்வாகிகள் 100 பேர் கலந்து கொண்டனர் முன்னதாக மதர் இளம் பனை பொருள் உற்பத்தியாளர் குழு செயலாளர் முத்துமாரி அனைவரையும் வரவேற்றார். முடிவில் மதர் கதலி பனை பொருள் உற்பத்தியாளர் குழு தலைவர் ஜெனிஷா நன்றி கூறினார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதர் சமூக சேவை நிறுவன பணியாளர்கள் லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.


