கடந்த 22.11.2021 மதியம் தூத்துக்குடியில் இருந்து கல்லூரி உதவி பேராசிரியர் ஒருவர் வசவப்புரத்திற்கு 25 ருபாய் டிக்கெட் எடுத்து பயணித்துள்ளார். வசவப்பபுரம் வந்தவுடன் அவர் எழுந்து நின்று பஸ் நிறுத்தத்தில் இறங்க வேண்டும் என கோரியுள்ளார். ஆனால் பஸ் ஓட்டுனர் மற்றொரு பேருந்தை முந்தும் வேகத்தில் வசவப்பபுரத்தில் நிற்காமல் சென்றுள்ளார். நடத்துனர் விசில் அடிக்க சொன்னால், டிரைவரிடம் கூறுங்கள் என்று சொல்ல, டிரைவரோ யாரையும் கண்டு கொள்ளாமல் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஐ.ஐ.பி பள்ளி முன்பு பேருந்தை நிறுத்தாமல், மெதுவாக செல்கிறேன் . நீங்களே இறங்கி கொள்ளுங்கள் என மிகவும் கறாக கூறி ஓடும் பஸ்ஸில் இருந்தே அவரை இறக்கி விட்டுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் உதவி பேராசிரியரை மனம் நோகும் படி பேசியும் உள்ளார்.
மன உழச்சலுடன் மூன்று கிலோ மீட்டர் நடந்து வந்த அவர் அதன் பின் வீடு வந்து, அரசு போக்கு வரத்து புகார் கொடுக்கும் வாட்ஸ் அப் எண்ணிலும், கமர்சியல் மேனேஜருக்கும் போனிலும் புகார் அளித்தார். இந்த சம்பவம் சமூக வளைதளத்திலும், பத்திரிக்கையிலும் செய்தி வெளியாக வந்தது. வாட்ஸ் அப் புகாரை ஏற்று கொண்ட அரசுபோக்குவரதது கழக வணிக மேலாளர் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுத்தார். 29ந்தேதி திங்கள் கிழமை காலை 11மணிக்கு இதற்கான விசாரணை வண்ணார்பேட்டை தலைமையகத்தில் நடந்தது. மனுதாரர் சார்பில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆஜராகி நடந்த விவரத்தினை எடுத்துக்கூறினார். பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பின்பு மனுதாரரின் கோரிக்கை படி வசவப்புபரம், பக்கபட்டி, முறப்பநாடு, வல்லநாட்டில் முறையாக பேருந்து நின்று செல்லவேண்டும் என்றும், இராமனுஜம்புதூர் / நாகல்குளம் பேருந்து முறையாக இயக்கவும் அரசர்குளத்துக்கு அதிகாலை 5.30 மணிக்கு சென்று வந்த பேருந்து தற்போது நிறுத்தப்பட்டு விட்டது, அந்த பேருந்தை முறையாக வல்லகுளம் அரசர்குளத்துக்கு இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அரசர்குளம் பேருந்தை இயக்க சம்பந்தப்பட்ட டெப்போ கிளை மேலாளர் மூலம் அறிவுருந்ததப்பட்டது.
போன் மூலம் புகார் செய்த வகைக்காக நடவடிக்கை எடுத்த அரசு போக்குவரத்து கழகத்தினை பொதுமக்கள் பாராட்டினார்கள்.


