பஹ்ரைன் நாட்டில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் 2 வெள்ளி பதக்கம் வென்ற கோவில்பட்டி வீரருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.
பஹ்ரைன் நாட்டில் நடைபெற்று வரும் 3வது இளையோர் ஆசிய விளையாட்டு போட்டியில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த மகாராஜன் பளூதூக்கும் போட்டியில் Snatch பிரிவில் இரண்டாம் இடம் வெள்ளி பதக்கமும் Clean &Jerk பிரிவில் இரண்டாம் இடம் வெள்ளி பதக்கமும் வென்றுள்ளார். பதக்கம் வென்றுள்ள மகாராஜனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்
கடம்பூர் செ.ராஜூ வாழ்த்து
முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “பஹ்ரைன் நாட்டில் நடைபெற்று வரும் 3வது இளையோர் ஆசிய விளையாட்டு போட்டியில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த மகாராஜன் பளூதூக்கும் போட்டியில் Snatch பிரிவில் இரண்டாம் இடம் வெள்ளி பதக்கம் Clean &Jerk பிரிவில் இரண்டாம் இடம் வெள்ளி பதக்கமும் வென்றுள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


