தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா கருங்குளம் ஒன்றியம் செய்துங்கநல்லூரில் சிஐடியு ஆட்டோ சங்க கிளை அமைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முத்து பாலகன் தலைமை தாங்கினார் ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் முருகன் சங்க கிளை கூட்டத்தை தொடக்கி வைத்து பேசினார். சிஐடியு மாவட்ட செயலாளர் ரசல் பேசினார் கூட்டத்தில் ஆட்டோ சங்க சிஐடியு கருங்குளம் ஒருங்கிணைப்பாளர் கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் மணி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது கிளை தலைவராக முத்து பாலகன், செயலாளராக மாணிக்கம், பொருளாளராக முருகன், துணைத் தலைவர் சுந்தர்ராஜ், பொன் ஸ்டீபன், துணைச் செயலாளர் இம்மானுவேல் , வேல்முருகன் ,கௌரவ தலைவராக கேபி கண்ணன், ஆலோசகராக தோழர் மணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் .
செய்துங்கநல்லூர் திருச்செந்தூர் நெடுஞ்சாலை விரிவாக்க பணி மந்தமாக நடைபெறுகிறது விரிவாக்க பணி உடனடியாக முடிக்க வேண்டும்
திருச்செந்தூர் – பாலக்காடு செல்லும் விரைவு ரயில் செய்துங்கநல்லூர் ரயில்வே நிறுத்தத்தில் நின்று செல்ல வேண்டும்.
செய்துங்கநல்லூரில் வார சந்தை அன்று பொதுமக்கள் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் இல்லாமல் ஆங்காங்கே நிறுத்து செல்வதால் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது பொதுமக்கள் வாகனங்கள் நிறுத்துவதற்கு தனியாக இடம் ஒதுக்கிட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன


