காஞ்சிபுரம் அருகே தியாக முகச்சேரி என்ற கிராமத்தில் 13.04.1935 அன்று பிறந்தவர் செந்தாமரை இவரது இயற்பெயர் கல்யாண சுந்தரம். ஏழு வயதில் தந்தையை இழந்து சித்தப்பாவின் அரவணைப்பில் வளர்ந்தவர் கௌசல்யா செந்தாமரை தம்பதியினரின் சீர்திருத்த திருமணம் காஞ்சிபுரத்தில் நடந்தேறியது. செந்தாமரை வசித்தது அறிஞர் அண்ணாவின் எதிர் வீடு என்பதால் அவருடைய அறிமுகமும் கரிசனமும் கிடைக்கப்பெற்றவர் அண்ணாவின் பரிந்துரையுடன் சென்னைக்கு வந்த செந்தாமரை எம்ஜிஆர் உடைய நாடக குழுவில் தானும் ஒரு நடிகரானார். பிறகு அங்கிருந்து சிவாஜி நாடக குழுவிலும் அங்கம் வகித்தார். தங்கப்பதக்கம் சினிமாவாகும் முன் இரண்டில் ஒன்று என்ற தலைப்பில் மகேந்திரன் எழுதி நாடகமாக நடத்தப்பட்டது. அப்போது அதன் நாயகன் வேடத்தில் முன்னூற்றுக்கும் அதிகமான முறை நடித்தவர் செந்தாமரை.
மிக அழகான பெயருக்கு சொந்தக்காரரான செந்தாமரை, கம்பீரமான நடிகர் ஒரு நல்ல நடிகர் தனது முகம் பார்வை குரல் என எல்லாவற்றாலும் நடிக்க தெரிந்தவராய் இருந்தல் அவசியம். தன்னுடைய குரலைக் கொண்டு என்னவெல்லாம் மாயாஜாலம் செய்ய முடியும் என்பதற்கு பல படங்களில் பிரமாதபடுத்தியிருப்பார். வில்லன் வேடத்திலேயே சின்ன சின்ன வித்தியாசங்களை ஒவ்வொரு படத்திலும் செய்து காட்டியது இவரது தனித்தன்மை.

பல படங்களில் பற்பல வேடங்களில் நடித்த தன் திறமையினாலே தனக்கென்று தனி இடத்தை வந்தடைந்த மாபெரும் ஆளுமை செந்தாமரை. 1970களில் இவை இறுதி வரைக்கும் தனக்கு கிட்டியே எந்த வேடமானாலும் அவற்றில் திறம்பட நடித்து நியாயம் செய்து வந்தார். தில்லானா மோகனாம்பாள் படம் அதற்கு ஒரு உதாரணம் அதில் சொற்ப நிமிடங்களை வந்து செல்லக்கூடிய மிராசுதாரராக தோன்றும் செந்தாமரை குரலும் நெடிய வசனத்தை அவர் உச்சரித்த பாங்கும் என்றும் மறவாத சிறப்பான வேடமாக அதை அவர் மாற்றிக் கொண்டதற்கான சாட்சியாக சொல்லும். வில்லன் வேடங்களில் நடித்து வந்த ரஜினி முதன் முதலில் நல்ல பாத்திரத்தில் ஸ்ரீதேவிக்கு அண்ணனாக கவிக்குயில் படத்தில் தோன்றினார் அந்த படத்தில் சின்னையா என்கிற முக்கிய பாத்திரம் என்றவர் செந்தாமரை. எண்பதுகளில் ரஜினிகாந்த் க்கு கடுமையாக ஈடு கொடுத்தவர் அவரை பொல்லாதவன் கழுகு தனிக்காட்டு ராஜா அடுத்த வாரிசு நான் மகான் அல்ல உன் கண்ணில் நீர் வழிந்தால் படிக்காதவன் நான் அடிமை இல்லை என ரஜினி அநேக படங்களில் அவருக்கென்று இடம் இருந்தது. பணக்காரன் படத்தில் குடிக்க அடிமையாக ரஜினியின் வளர்ப்பு தந்தையாக கதை நெடுக விக்கல் எடுப்பதாக மிக நுட்பமாக அந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருந்தார் செந்தாமரை. குரு சிஷ்யன் படத்தில் ரஜினிக்கு அவர் தந்தையாக வருவார் அவரை படம் முழுக்க சிறை வைத்திருக்கும் வில்லன்களிடமிருந்து கஷ்டப்பட்டு மீட்பர் ரஜினி தம்பிக்கு எந்த ஒரு படத்திலும் ரஜினியின் தந்தை அவரை திருத்த தன் கிராமத்து நண்பர் கங்காதரன் அதாவது செந்தாமரை வீட்டுக்கு தான் அனுப்பி வைப்பார் அந்த கிராமத்து பெரிய மனிதர் இடத்தில் நூல் பிடித்தார் போல் கம்பீரம் காட்டினார் செந்தாமரை.


