கடந்த பத்து ஆண்டு காலங்கள் வரை இரு போகங்கள் விளைந்து. மேலதிகமாக கோடை காலத்தில் உளுந்தும் விளைந்த. மேலப்பாளையம் நஞ்சை பூமி நாசமாகப் போய் இன்றைக்கு வீட்டுமனைகளாக உருவாவதற்கு.பாளையங்கால்வாயில் தண்ணீரை நிறுத்திய கொடுமைதான் காரணம் என்று வெளிப்படையாகச் சொல்கிறேன்.
பழவூர் அணைக்கட்டுக்குபின்னர் உருவாகி 43 கிலோ மீட்டர் தூரம்..162 மடைகள் வாயிலாக 10 ஆயிரத்து 670 ஏக்கர் பூமியை விளைய வைத்து. 57 சிறிய பெரிய கிராமங்களின் குளங்களுக்கும் பாய்ந்து. கடைசியில் மருதூர் அணைக்கட்டு வரை பல்வேறு குளங்களை நிரப்பிச் செல்கின்ற பாளையங்கால் வாயை இந்தக் கதிக்கு ஆளாக்கியது சமூக நலன் எதிலும் கவனம் செலுத்தாத. சோம்பேறி அதிகாரிகள் தான் காரணம் என்பதைத் தெளிவாகச் சொல்ல முடியும்.
ஜூன் மாதம் ஒன்றாம் தேதி ஆகிவிட்டால் பள்ளிக்கூடங்கள் திறக்கும் போது.பாளையங்கால் வாயில் தண்ணீரும் திறந்து விடப்படும். இந்த நிலைமையை மாற்றி, அணைக்கட்டுகளில் தண்ணீர் இருந்தால் கூட அதிகாரிகள் அந்த தேதிகளில் பாளையங் கால்வாயில் தண்ணீரைத் திறக்காமல், மனம் போன போக்கில் திறந்து அதன் காரணமாக நவம்பர் மாதத்தில். அறுவடை நடக்கும் நிலைமையை ஏற்படுத்துவார்கள்.
விவசாயிகள் நல்ல விளைச்சல் இருந்தும் மழைக்காலத்தில் சிக்கித் திணறி சின்னாபின்னம் ஆக்கப்பட்ட கொடுமைகளும் அடங்கும்.
பாளையங்கால்வாய் தாண்டி செல்கின்ற ஊர்களின் பாலங்கள் கட்டப்படும் போது. எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கால்வாய் தண்ணீரை நிறுத்தி விடுவார்கள்.
பல்லாயிரக்கணக்கில் விளையும் விளைச்சலை நிறுத்தி.கான்ட்ராக்டர்களை வாழ வைப்பது தான் அவர்களின் ஒரே நோக்கம் .
கடந்த 10 ஆண்டுகளில். பாலங்கள் கட்டுகிறோம் என்ற பெயர்களில், காண்ட்ராக்டர்களின் மிக மெதுவான மெதுவான பணியின் காரணமாக 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட விளைச்சல் தருவதற்கு அடிப்படை காரணமாக உள்ள பாளையங்கால் வாய் தண்ணீரை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.
விவசாயிகளின் வயிற்றில் அடித்து கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள்.
நஞ்சை பூமி வறண்ட பூமி ஆக மாறியதன் காரணமாக.தன்னுடைய நிலங்கள் எல்லாம் விவசாயிகள் இழந்து.நகரங்களை ஒட்டி.வீட்டு மனைகள் ஆக்கி பாளையங்கால் வாயை ஒட்டி.பல்வேறு திடீர் நகர்கள் உருவாக்கம் பெறுகின்றன.
பாளையங்கால் வாயின் நீர் செல்லும் பாதைகளுக்கு கீழே.இப்பொழுது பல்வேறு பகுதிகளில் வீட்டு மனைகள் உருவாவதால்.அவற்றிலிருந்து வெளியேறும் கழிவு நீரும் நேரடியாக தாமிரபரணியை சென்று அடையக்கூடிய கொடுமை நடந்து கொண்டிருக்கிறது.
இதைத் தடுப்பார் யாரும் இல்லை.
அங்கீகாரம் அற்ற மனைப்பிரிவுகளில் மிக ஒடுக்கமான வீதிகள் அமைத்து.அதில் தீயணைப்பு வண்டியோ, குடிநீர் தேவைக்கு கார்ப்பரேஷன் வண்டிகளோ, துப்புரவு வாகனங்கள், ஆழ்குழாய் அமைக்கும் போர் வண்டிகளோ, செல்லக்கூடிய அளவிலான தெருக்கள் இல்லாமல். பூங்காக்களோ, அடக்கத் தலங்களோ எவையும் இன்றி.அவசரக்கதியில் வயற்காடுகள் எல்லாம் நாசம் செய்து காசாக்கப்பட்டு கொடுமை நடைபெறுகின்றது,.
இதனைத் தடுப்பதற்கு யாரும் இல்லை .
அங்கீகாரம் அற்ற மனைப்பிரிவுகளில் பல லட்சகோடிக்கணக்கில் ரியல் எஸ்டேட் அதிபர்கள் சம்பாத்தியம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட இடத்தில் இருக்கின்ற வீடுகளில் குடிதண்ணீர், மின்சார இணைப்பு , சாலை வசதிகள் பெற்றாக வேண்டும் என்று தவிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?
மாநில அரசும், திருநெல்வேலி மாநகராட்சியும் உடனடியாக இந்த மதகைத் திறந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் .
கான்ட்ராக்ட் காரர்கள் கோடை காலத்தில் மட்டுமே பாளையங்கால்வாயில் தண்ணீர் வராத நேரங்களில் அதன் மீது பாலங்கள் கட்டுவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சித் தலைவர் இதனை செய்வாரா? எதிர்பார்ப்போம்.
சாக்கடை நீரை ஆற்றில் திறந்தவர்களை இந்தச் சமூகம் மன்னிக்காது.


