துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் டாக்டர் பொற்செல்வன் அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் உலக உணவு தினம் மற்றும் உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தின விழா இன்று (28.10.2023) அன்னம்மாள் பெண்கள் கல்வியியல் கல்லூரியில் வைத்து நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு எம்பவர் இந்தியாவின் கௌரவ செயலாளர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் உறுப்பினருமான சங்கர் தலைமை தாங்கினார்.
துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அவர்களின் தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மாரியப்பன் கருத்துரை வழங்கினார்.
மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அபுல் காசிம் சிறப்புரை ஆற்றினார்.
அன்னம்மாள் பெண்கள் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜாய்சிலின் ஷர்மிளா வாழ்த்துரை வழங்கினார்.
மாவட்ட உணவு பாதுகாப்பு துறை வழிநடத்தல் ஆலோசனை குழுவின் உறுப்பினர் லலிதாம்பிகை நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் அயோடின் பற்றாக்குறை தடுப்பு உறுதி மொழியினை அனைவரும் ஏற்றார்கள்.
ஏற்பாடுகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, என்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி ஆராய்ச்சி நடுவம் மற்றும் அன்னம்மாள் பெண்கள் கல்வியியல் கல்லூரி ஆகியோர்கள் இணைந்து செய்திருந்தார்கள்.


