தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வார காலமாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மேலும் தொடர்ந்து 5 தினங்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதிக்கு உட்பட்ட கருங்குளம், செய்துங்கநல்லூர், காரசேரி, புதுக்குடி, நாட்டார்குளம், ஆழ்வார்திருநகரி போன்ற பகுதிகளில் நேற்று மாலை முதல் தொடர் மழைபெய்து வருகிறது.
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 18 மில்லி மீட்டர் மழையும், சாத்தான்குளத்தில் 31 மில்லி மீட்டர் மழையும், காயல்பட்டிணத்தில் 16 மி மீட்டர் மழையும் பெய்துள்ளது.


