தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் மண்டல தலைவர் திருமதி கோ அன்னலட்சுமி தலைமையில் நடைபெற்றது. மேற்கு மண்டல உதவி ஆணையாளர் திரு எஸ் சேகர் முன்னிலை வகித்தார். குழந்தைகள் பாதுகாப்பு அழகு பாதுகாப்பு அலுவலர் திரு ஜேம்ஸ் அதிசயராஜ் அவர்கள்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி உறுப்பினரும், மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன மாநில தலைவருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
இதில் குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்களான பல்வேறு துறையை சார்ந்த அரசு அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் சமூக ஆர்வலர்கள் தொண்டு நிறுவன இயக்குனர்கள் பலர் கலந்து கொண்டனர்


