தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 3228 இடங்களில் இருந்த ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் போலீசார் “மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களிடம் உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து நேற்று திருச்செந்தூர் உட்கோட்டத்தில் திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காயாமொழி, திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தாரம்மன் கோவில் தெரு, ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்துகிருஷ்ணாபுரம், ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல ஆத்தூர், குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிசகுவிளைகாலனி ஆகிய பகுதிகளில் உள்ள 33 மின்கம்பங்கள், பொதுசுவர் 1 என 34 இடங்களிலும்,
ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரையடியூர் பகுதியில் 5 மின்கம்பங்களிலும், மின்வாரிய ட்ரான்ஸ்பார்மர் 1, நீர்தேக்க தொட்டி 1, பொதுசுவர் 1, பேருந்துநிறுத்தம் 1 என 9 இடங்களிலும்,
மணியாச்சி உட்கோட்டத்தில் மணியாச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முறம்பன், சங்கம்பட்டி, ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிந்தலக்கட்டை, மேல மீனாட்சிபுரம், மேல சுப்பிரமணியபுரம், வெள்ளாரம், சந்திரகிரி, நாரைக்கிணறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழக்கோட்டை, கோவிந்தபுரம், கோபாலபுரம், கடம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓணாமாக்குளம், வி.பி தாழையூத்து, வி.பி புளிக்குளம், மேல பாறைப்பட்டி, கீழ பாறைப்பட்டி, கோபாலபுரம், தங்கம்மாள்புரம், பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீதம்பட்டி, கோவிந்தம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள மின்கம்பங்கள் 139, மின்வாரிய ட்ரான்ஸ்பார்மர் 3, நீர்தேக்க தொட்டி 5, தெருக்குழாய் 1, பொதுசுவர் 1, பேருந்து நிறுத்தம் 2, நெடுஞ்சாலைத்துறை அடையாளப் பலகை 2, பாலம் 7 என 160 இடங்களிலும்,
விளாத்திகுளம் உட்கோட்டத்தில் மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழகரந்தை, சங்கரலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கவுண்டம்பட்டி, சங்கரலிங்கபுரம் ஆகிய பகுதியில் மின்கம்பங்கள் 26, நீர்தேக்க தொட்டி 2, பொதுசுவர் 3, பேருந்து நிறுத்தம் 1, பாலம் 3 என 35 இடங்களிலும்,
சாத்தான்குளம் உட்கோட்டத்தில் சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிதம்பராபுரம் பகுதியில் உள்ள 32 மின்கம்பங்கள், நெடுஞ்சாலைத்துறை அடையாளப் பலகை 1, பாலம் 2 என 35 இடங்கள் உட்பட இன்று ஒரே நாளில் மொத்தம் 273 இடங்களில் ஊர்த்தலைவர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் அந்தந்த பகுதி மக்கள் தாமாகவே முன்வந்து வெள்ளை நிற பெயிண்டால் ஜாதிய அடையாளங்களை அழித்தனர்.
இதுவரை மொத்தம் 3228 இடங்களில் இருந்த ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளது. ஜாதிய அடையாளங்களை தாமாக முன்வந்து அழித்த கிராம மக்களை மற்றும் மேற்படி காவல்துறையினர் அனைவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.


