குடும்ப அட்டையில் உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பங்கள் நிராகரிப்பு தொடர்பாக ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேசிய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் மாவட்ட செயலாளர் ஆர்வலர் அ.செல்வகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடும்ப அட்டையில் 5 வயதிற்குட்பட்ட உறுப்பினர்களை சேர்க்க பிறப்பு சான்றிதழ் அல்லது ஆதாரை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம் என்று இருக்கும் நிலையில் பிறப்பு சான்றிதழ் கொண்டு உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பங்கள் எதற்காக நிரகாரிக்கப்படுகின்றன?? இதுகுறித்து விசாரணை செய்திட வேண்டுமென்றும் விதிகளுக்கு மாறாக விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பின் பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.


