தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் அடுத்த மாதம் (ஜூலை) 14-ஆம் தேதி மாநில அளவிலான சதுரங்க போட்டிகள் நடக்கிறது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகம் மற்றும் காமராஜ் கல்லூரி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது: மாநில அளவிலான சதுரங்க போட்டி தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் அடுத்த மாதம் (ஜூலை) 14-ஆம் தேதி நடக்கிறது. இந்த போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த அனைவரும் பங்கேற்கலாம்.
9 வயதுக்கு உட்பட்டவர், 11 வயதுக்கு உட்பட்டோர், 13 வயதுக்கு உட்பட்டோர், 17 வயதுக்கு உட்பட்டோர் என நான்கு பிரிவுகளாக பள்ளி மாணவ-மாணவிகளுக்கும், பொது பிரிவாக அனைத்து வயதினருக்கும் என 5 பிரிவுகளாக போட்டிகள் நடக்கிறது. மாணவ மாணவிகள் பிரிவில் பங்குபெறும் அனைவருக்கும் வயதுக்கான சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
நுழைவு கட்டணம் செலுத்தி ஜூலை 11-ஆம் தேதி வரை பெயரை, www.Easypaychess.com மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நுழைவு கட்டணத்தில் ரூ.100 சலுகை வழங்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக எட்டு சைக்கிள்கள் வழங்கப்படுகிறது.
இரண்டு முதல் 15 வரை வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு 120 பரிசு கோப்பைகள் வழங்கப்பட உள்ளது. பொதுப் பிரிவில் முதல் 25 பேருக்கு மொத்தம் ரூ.25 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்பட உள்ளன. மேலும் விவரங்களுக்கு 98658 30030,98946 90574, 89259 88874 ஆகிய செல்போன் எங்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


