எனது நூலுக்கு தினத்தந்தியில் விமர்சனம் எழுதியுள்ளார்கள். மிகச்சிறப்பாக விமர்சனம் எழுதிய தினத்தந்தி ஆசிரியர் குழுவுக்கு மிக்க நன்றி -அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு
பொருநை-ஆதிச்சநல்லூர் (அறிக்கைகளும் அருங்காட்சியகங்களும்)-முத்தாலங்குறிச்சி காமராசு
மனித நாகரிகத்தின் தொட்டில் எனப் படும் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை, கொற்கை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற தொல்லி போருநை அரிச்சநல்லார். யல் ஆய்வுகள் முழு விவரத்தையும், அங்கே அருங் காட்சியகங்கள் அமைப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளையும் இந்த நூல் விளக்கமாகத் தெரிவிக்கிறது. 1902-ம் ஆண்டு அலெக்ஸாண்டர் இரியா ஆதிச்சநல்லூரில் நடத்திய அகழாய்வின் அறிக்கை, 2004-ல் நடைபெற்ற அக ழாய்வின் அறிக்கை, 2009-ல் வெளியான ஆய்வுக் கட்டுரைகள் போன்ற ஆவணங்கள் ஸ்கேன் செய்து படிக்கும் வகையில் தரப்பட்டு இருக்கின்றன. இத னால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களில் உள்ள தகவல்களை எளிதாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. பொருநை-ஆதிச்சநல்லூர் ஆய்வுகளின் சிறந்த பதிவாக இந்த நூல் விளங்குகிறது. (ஆசிரியர்: முத்தாலங்குறிச்சி காமராசு; வெளியீடு: பொன்சொர்ணா; விலை: ரூ.375; செல்போன்: 8760970002)


