தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் கீழுள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு கடன் சங்கங்கள் உட்பட தொடக்கநிலை கடன் சங்கங்களில் நிலுவையில் இருந்த ஐந்து பவுனுக்குட்பட்ட நகை கடன்கள் தமிழக அரசு ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள படி தகுதியுடைய 58,896 பேர் பெற்ற 165.87 கோடி மதிப்பிலான நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு பயனாளிகளுக்கு சான்று மற்றும் அடமானம் வைக்கப்பட்டுள்ள நகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே கொங்கராயகுறிச்சியில் உள்ள ஆழ்வார்கற்குளம் கூட்டுறவு தொடக்க வேளாண்மை சங்கத்தில் இன்று நகைகள் தள்ளுபடி செய்து சான்று மற்றும் நகைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் நகை மொத்தம் 555 பேருக்கு ரூபாய் 1,90 கோடி மதிப்பிலான நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றுகளை ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற ஊர்வசி அமிர்தராஜ் வழங்கியதோடு அடமானம் வைக்கப்பட்டிருந்த நகைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆழ்வார்கற்குளம் கூட்டுறவு சங்க தலைவர் அய்யாத்துரை பாண்டியன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் கிருஷ்ணன், கருங்குளம் யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன், கூட்டுறவு சங்க செயலாளர் தம்பு, முதுநிலை எழுத்தர் கந்தசாமி, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர், நேர்முக உதவியாளர் சந்திரபோஸ், மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் எடிசன், கருங்குளம் வட்டார தலைவர் புங்கன், கருங்குளம் திமுக ஒன்றிய செயலாளர் இசக்கி பாண்டியன், முன்னாள் வட்டார தலைவர் சிங்கப்பண், கொங்கராயகுறிச்சி பஞ்சாயத்து தலைவர் ஆபிதா அப்துல் சலாம், ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் ஷேக் அப்துல் காதர், கால்வாய் மணி, வனிதா ஸ்டாலின், சித்தார்த்தன், சிவசுப்பிரமணியன், பெரிய பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


