‘பார்வை பத்து’
நிறை 1
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் எப்படியோ கடந்த வ.உ.சி. மைதானத்தை மூன்றே நாட்களில் விழாவுக்கு தயார் படுத்திவிட்ட மாவட்ட ஆட்சித்தலைவரின் விவேகம் + வேகம் பாராட்டுதலுக்குரியது!
நிறை 2
புத்தகத் திருவிழா புத்தகங்களோடு நின்றுவிடாமல் தமிழரின் பழம் பெருமை பறைசாற்றும் ஆதிச்சநல்லூர், கீழடி, சிவகளை செய்திகளை பொதுமக்களுக்கு முழுமையாக காட்சிப்படுத்தி இருந்தது பெருமைக்குரியது!
நிறை 3
புத்தகத் திருவிழாவில் ‘என்னமோ நடக்குதுப்பா இங்க’ எனும் வார்த்தைகளை பொதுமக்களிடம் மேலோங்கச் செய்யும் பொருட்டு தினமும் ஏதேனும் ஒரு நிகழ்ச்சியை பரபரப்பாக நடத்திக் கொண்டிருந்த அரசு அருங்காட்சியகத்திற்கு வாழ்த்துகள்!
நிறை 4
சென்றமுறை போலல்லாது அனைத்து பள்ளிகளுக்கும் அரசு வாகன வசதி செய்து கொடுத்ததோடு உற்சாகமான போட்டிகளையும் கலை நிகழ்ச்சிகளையும் நடத்தி மாணவ-மாணவிகளுக்கு பாராட்டும் சான்றிதழும் பெற்றுக்கொடுத்த பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் ஆசிரியர்கள் அலுவலர்களின் பணி சிறப்பு!
நிறை 5
திருநெல்வேலி தானே என்று இல்லாமல் சென்னை புத்தக கண்காட்சி முடித்த கையோடு தமிழகத்தின் முக்கியமான பதிப்பகங்கள் அனைத்தும் புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டமை போற்றுதலுக்குரியது. பபாசிக்கு வாழ்த்துகள்
அன்புடன் பாப்பாக்குடி இரா.செல்வமணி.


