தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் அமைச்சர் கீதா ஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு (SGFI – School Games Federation of India) சார்பில் சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான கூடைப்பந்து விளையாட்டுப் போட்டியில் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த காவ்யா, ஜெப்ரின் மற்றும் சட்டீஸ்கரில் நடைபெற்ற போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற ரமேஷ் ஆகிய வீரர், வீராங்கனைகள் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்நிகழ்வின் போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ், மாவட்ட கூடைப்பந்து பயிற்சியாளர் ஆனந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.


