தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பூங்காவில் ஸ்கேட்டிங் தளத்தை சரி செய்வது தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில், “தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முத்துநகர் கடற்கரை பூங்காவை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். அப்போது கடற்கரையில் ஸ்கேட்டிங் விளையாடுவதற்காக தளத்தை சரி செய்து தருமாறும் குழந்தைகள் அதிகளவில் வருகின்றதால் அருகிலுள்ள நேரு பூங்காவினையும் அதற்காக ஒதுக்கித் தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.
ஆகவே மாநகர மக்களின் கோரிக்கையின்படி சரி செய்தும் நேரு பூங்காவினையும் அதற்காக கலந்து ஆலோசித்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் தெரிவித்தார். ஆய்வின்போது, வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், மீனவரணி அமைப்பாளர் டேனி அவர்கள் மற்றும் ஸ்கேட்டிங் பயிற்சியாளர்கள் உடனிருந்தனர்.


