ஆழிகுடி கிராமத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. ஆழிகுடி நூலகத்தில் நடந்த நிகழ்விற்கு மாவட்ட ஆட்சி தலைவர் மரு. செந்தில்ராஜ் தலைமை தாங்கி மனுக்களை பெற்றுக்கொண்டார். அதன் பின் அருகில் இருந்த அங்கன் வாடி மையத்துக்கு சென்றார். அங்குள்ள குழந்தைகளிடம் ஏ.பி.சி.டி சொல்ல சொல்லி கேட்டார். குழந்தைகள் தயக்கமின்றி மாவட்ட ஆட்சி தலைவரிடம் பேசியதை கேட்டு அனைவரும் கைதட்டி உற்சாக படுத்தினர். அதன் பின் அவர் கடந்த 5 ந்தேதி தாமிரபரணி ஆற்றில் மரம் நடும் பணியை ஆரம்பித்த ஆற்றங்கரைக்கு சென்று ஆய்வு செய்தார். அங்கே நடப்பட்ட மரககன்று வளர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ளே சிறப்பாக வரலாறு பேசப்படும் திரு ஆவளி பாறையை பார்த்து அதன் வரலாற்றை கேட்டறிந்தார்.
அதன் பின் மாவட்ட ஆட்சி தலைவர் ஏற்பாடின் பேரில் பானுமதி என்ற மாற்று திறனாளி பெண்ணுக்கு கட்டி கொடுக்கப்படும் அரசு இலவச வீட்டை பார்வையிட்டார். தொடர்ந்து அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஆழிகுடி கிராமத்தில் நடைபெறும் பணிகளை குறித்து ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சி தலைவர் பெற்ற மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்து மே 2 ந்தேதி நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சி தலைவருடன் கோட்டாச்சியர் சிவசுப்பிரமணியன், ஆழிகுடி பஞ்சாயத்து தலைவி முருகேஸ்வரி தினேஷ், தாசில்தார் ராதாகிருஷ்ணன், ஆணையாளர்கள், செல்வி, பாக்கிய லீலா, கவுன்சிலர் சுடலை முத்து, வருவாய் ஆய்வாளர் முத்துராமன், கிராம நிர்வாக அதிகாரி ஆனந்த ஜோதி, பஞ்சாயத்து கிளார்க் முத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பாக்ஸ் போடலாம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் மரு. செந்தில்ராஜ் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் அமைய சிறப்பு நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும் புரதான சின்னங்கள், வரலாற்று சிறப்பு மிக்க அறியப்படாத சுதந்திரா போராட்ட வீரர்கள் வரலாறு என தேடி அதை பதிவிட்டுவருகிறார். தாமிரபரணி ஆற்றுக்குள் ஆழிகுழியில் திரு ஆவளி பாறை என்ற இடத்தினை பற்றி சமூக சேவகர் தினேஷ் கூறியவுடன் ஆர்வத்துடன் தாமிரபரணிக்குள் பார்வையிட்டார். மாவட்ட ஆட்சி தலைவரின் ஆர்வம் அனைவரையும் மெய்சிலிர்கக வைத்தது. மேலும் தாமிரபரணியில் நட்ட மரங்கள் எப்படி இருக்கிறது என மீண்டும் அவ்விடத்துக்கு கலெக்டர் வந்து பார்வையிட்டது. பொதுமக்களிடையே உற்சாகத்தினையும் மரம் நடவேண்டும் என்ற ஆர்வத்தினையும் ஏற்படுத்தியது.
&&&


