ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி 18வது வார்டு பகுதிகளில் நாளை (29.04.2022.) மின்தடை.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் நாளை ஏப் 29ம் தேதி நவதிருப்பதியில் முதலாவது ஸ்தலமான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சித்திரை தேரோட்டம் நடைபெற உள்ளதால் மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் மின்வாரிய துறை உதவி செயற்பொறியாளர் சந்திரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு கூறியிருப்பதாவது.
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிராண் கோவில் சித்திரை தேரோட்டம் நடைபெறுவதால், ஸ்ரீவைகுண்டம் உப மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறப்படும் ஸ்ரீவைகுண்டம், பேரு£ட்சி 18வது வார்டு பகுதிகளுக்கு மட்டும் மின் வினியோகம் நாளை 29ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.


