தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் மிகவும் பழமையான சிவகாமி அம்பாள் பதஞ்சலி வியாக்ரபாதீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் தென்தில்லை என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஆலயத்தில் வருடம் தோறும் திருவாதிரை திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறும். அதே போல் இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று தொடங்கியது.
திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனை நடந்தது. அதன்பின்னர் சிறப்பு யாகசாலை பூஜை நடந்தது. பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து கொடிமரத்தில் திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பெருங்குளம் செங்கோல் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிய ஞான பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டார். இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து கொடிமரத்திற்கு மஞ்சள், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மகா அபிஷேகம் நடந்தது. அதன்பின்னர் கொடிமரத்திற்கு மகா ஆராதனை நடந்தது.
திருவிழா நடைபெறும் 10 தினங்கள் பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும். திருவிழாவின் சிகர நிகழ்ச்சி ஜனவரி 7ம் தேதி நடைபெறுகிறது.


