சல்மான் கான் பிறப்பு: டிசம்பர் 27, 1965) ஒரு பிரபல இந்திய திரைப்பட நடிகரும், பாலிவுட் நடிகருமாவார். பீவி ஹோ தோ ஐசி (1988) என்ற திரைப்படத்தில் அறிமுகமான கான், மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற மைனே பியார் கியா (1989) மூலம் இந்தி திரைப்படத்துறையில் களமிறங்கினார். அத்திரைப்படத்தில் அவரின் நடிப்பிற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் அவர் வென்றார். சாஜன் (1991), ஹம் ஆப்கே ஹே கோன் (1994), பீவி நம்பர் 1 (1999) போன்ற பாலிவுட்டின் மிகப் பெரிய வெற்றிப் படங்களும் அவரை இந்திய திரைப்படத்துறையில் நிலைநிறுத்தி உள்ளன.
1999ல், குச் குச் ஹோதா ஹே (1998) திரைப்படத்தில் தம் சிறப்பான நடிப்பிற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்ற கான், அப்போதிருந்து ஹம் தில் தே சுக்கே சனம் (1999), தேரே நாம் (2003), நோ என்ட்ரி (2005) மற்றும் பார்ட்னர் (2007) உள்பட பல சிறந்த மற்றும் வர்த்தகரீதியாக வெற்றி பெற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த வெற்றிகள் சல்மான் கானை இந்தி சினிமாவின் மிகப் புகழ்வாய்ந்த முன்னணி நடிகர்களில் ஒருவராக அவரை நிலைநிறுத்தியது.
சல்மான் கான், 1988ல் பீவி ஹோ தோ ஐசி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இதில் அவர் ஒரு துணை நடிகர் கதாபாத்திரம் ஏற்று நடித்தார். சூரஜ் ஆர். பர்ஜத்யாவின் திரைப்படமான மைனே பியார் கியா (1989) திரைப்படத்தில் தான் அவர் முதன்முறையாக முன்னனி கதாபாத்திரம் ஏற்று நடித்தார். அப்படம் வர்த்தரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும் சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் அப்படம் அவருக்கு பெற்று தந்தது.
1990ல், தென்னிந்திய திரைப்பட நட்சத்திரமான நக்மாவுடன் அவர் இணைந்து நடித்த பாக்ஹி|பாக்ஹி என்ற ஒரேயொரு திரைப்படம் மட்டுமே வெளியானது. இந்த படமும் அவருக்கு பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப்படமாக அமைந்தது. இதை தொடர்ந்து, 1991-ஆம் ஆண்டில், பத்தர் கே பூல் , சனம் பேவஃபா மற்றும் சாஜன் ஆகிய மூன்று வெற்றி படங்களில் அவர் நடித்திருந்தார். இந்த மாபெரும் ஆரம்ப பாக்ஸ் ஆபீஸ் வெற்றிகள் இருந்த போதினும், அவரின் 1992-1993-ல் வெளியான அனைத்து திரைப்படங்களும் தோல்வி அடைந்தன.


