
எச். வி. ஹண்டே ( பிறப்பு : நவம்பர் 28, 1927) ஒரு தமிழக மருத்துவரும், அரசியல்வாதியும் ஆவார். 1967,1971 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் பூங்கா நகர் தொகுதியில் இருந்து சுதந்திரா கட்சி வேட்பாளராக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது மூதாதையர்கள் மங்களூரில் இருந்த காரணத்தால் மங்களூரார் என்று அழைக்கப்படுகிறார்.
1980இல் நடந்த தேர்தலில் அண்ணா நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக 699 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியிடம் தோற்றார். மறைந்த முதலமைச்சர் எம் ஜி ஆரின் அமைச்சரவையில் 10 ஆண்டுகள் சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். அண்ணாநகர் தொகுதியில் 2006ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு 9 ஆயிரம் வாக்குகளை பெற்றார். 2004இல் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினர் ஆனார். இவர் ஓர் எழுத்தாளரும் ஆவார். ராமாயணம் டாக்டர் அம்பேத்கர் மற்றும் பிற தலைப்புகளில் பல புத்தகங்களை எழுதியுள்ளார். 1984 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள செனாய் நகரில் அவர் அண்டே மருத்துவமனையை திறந்தார்.
வகித்த பதவிகள் தமிழக அமைச்சரவையில் சுகாதார அமைச்சர் ( 1977 – 87)