தூத்துக்குடி கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான தேர்வு முகாம் நாளை (நவ.29) சனிக்கிழமை நடைபெற உள்ளது. இது தொடர்பாக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் ஒன்றிய அரசின் அலீம்கோ நிறுவனம் இணைந்து ஒருங்கிணைக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான தேர்வு முகாம் தூத்துக்குடி – போல்பேட்டை பகுதியில் உள்ள கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நாளை (29.11.2023 – சனிக்கிழமை) காலை 9.00 மணிமுதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெற உள்ளது.
உடல் இயக்க குறைபாடு கொண்டவர்கள், 100% பார்வை குறைபாடு கொண்டவர்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், செவித்திறன் குறைபாடு உடையவர்கள், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இந்த முகாம்களில் பங்கேற்று தங்களுக்கு தேவையான உதவி உபகரணங்களை பெற விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


